News February 24, 2025
நாதகவில் இருந்து விலகினார் காளியம்மாள்

நாதகவில் இருந்து விலகுவதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இத்தனை நாள்கள் உண்மையாய், உறவாய் பழகிய, பயணித்த அத்தனை உறவுகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, வருத்தங்களையும் பகிர்ந்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். தமிழ் தேசியத்தை விதைக்கும் வகையில் தன்னுடைய பயணம் தொடரும் என்று கூறிய அவர், இந்தப் பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என கனவில் கூட நினைக்கவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
Similar News
News February 24, 2025
நியூசி.,க்கு 237 ரன்கள் டார்கெட்

ICC Champions Trophy: இன்று நியூசி.,க்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 236 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ 77 ரன்கள் குவித்தார். அவர் மட்டும் நிலைத்து நிற்காமல் இருந்திருந்தால் அந்த அணி 200 ரன்களுக்கு கீழ் தான் இருந்திருக்கும். அதே நேரம், நியூசி., அணியில் அசத்தலாக பந்துவீசிய மைக்கேல் பிரேஸ்வெல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
News February 24, 2025
கூட்டணி அமைப்பாரா ரஜினி?

ஜெயலலிதாவுடன் பல நேரங்களில் முரண்பட்ட ரஜினிகாந்த், இன்று போயஸ் கார்டன் இல்லத்திற்கு சென்று பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டார். எப்போதும் பாஜகவுடன் இணக்கம் காட்டும் ரஜினியின் இந்த செயல்பாடு பல கேள்விகளை எழுப்பியுள்ளது. கடந்த தேர்தலில் பிரிந்த அதிமுக – பாஜக கூட்டணியை மீண்டும் இணைப்பதில் ரஜினி அணிலாக செயல்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
News February 24, 2025
ரோகித் ஷர்மானு சொன்னாலே அதிரும்

இந்திய அணி விளையாடிய கடந்த 21 ஐசிசி தொடர் போட்டிகளில் 20இல் வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறது. இந்த அனைத்து போட்டிகளிலும் கேப்டன் யார் தெரியுமா? லெஜண்ட் ரோகித் ஷர்மா. கோலிக்குப் பின் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ரோகித் ஷர்மா, டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்தார். இதனையடுத்து, தற்போது சாம்பியன்ஸ் டிராபியிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இவரது கேப்டன்சிக்கு உங்களது மார்க் என்ன?