News February 28, 2025
கலி முத்திருச்சு.. இதோ எடுத்துக்காட்டு!

77 வயது தாயை பார்த்து கொள்ள முடியாத மகனை கோர்ட் கடுமையாக விமர்சித்துள்ளது. ₹5,000 தர உத்தரவிட்ட செஷன் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மகன், ஹரியானா ஹைக்கோர்ட்டை நாடினார். இதில் நீதிபதி, ‘இது கலி யூகத்தின் எடுத்துக்காட்டு’ என விமர்சித்தார். மேலும், 3 மாதத்தில் தாயார் பெயரில் ₹50,000 டெபாசிட் செய்யவும், மாதம் ₹5,000 கொடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. இப்படியும் சில மகன்கள்.. என்னவென்று சொல்வது!
Similar News
News February 28, 2025
ரூ.1,000 உதவித் தொகைக்கான தேர்வு: புது அறிவிப்பு

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் 9 – 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படும். இந்தத் தேர்வு பிப்.9இல் நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு www.dge.tn.gov.inஇல் வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சேபனை இருந்தால், dgedsection@gmail.comஇல் மார்ச் 5க்குள் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.
News February 28, 2025
இட்லிக்குள் ஊடுருவும் நச்சு ரசாயனங்கள்

சாலையோர உணவகங்கள் மற்றும் சில கடைகளில் இட்லி வேகவைக்கும் தட்டில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுகிறது. நீராவியில் வேகும்போது, பிளாஸ்டிக்கில் உள்ள bisphenol A (BPA), phthalates, ஹார்மோனை சீர்குலைக்கும் ரசாயனங்கள், டயாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் போன்ற நச்சுப் பொருட்கள் இட்லியில் கலந்துவிடுகின்றன. இந்த இட்லிகளை சாப்பிடுவோருக்கு புற்றுநோய் அபாயம் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.
News February 28, 2025
சிரியாவில் 1,000 பேர் கொடூர கொலை

சிரியாவில் 1,000க்கும் மேற்பட்டோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அல் ஆஸாத் அதிபராக (2000-2024) பதவி வகித்தபோது, அவர்கள் கைது செய்யப்பட்டு, டமாஸ்கஸ் ராணுவ விமான நிலைய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் அவர்கள் கொடூரமாக சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர். அங்கு அண்மையில் தோண்டப்பட்ட குழியில் சடலங்கள் எடுக்கப்பட்டுள்ளன.