News June 19, 2024

கண்ணீரில் மூழ்கிய கள்ளக்குறிச்சி

image

கள்ளச்சாராயம் குடித்ததில் அடுத்தடுத்து 9 பேர் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் கண்ணீரில் மூழ்கியுள்ளனர். அடுத்தடுத்து உயிரிழப்பதால், மா.சுப்பிரமணியனை தொடர்ந்து, அமைச்சர் எ.வ.வேலுவும் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளார். அங்குள்ள சூழலை ஆய்வு செய்து, முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் கொடுக்கப்படும். அதன்பின் ஸ்டாலினும், நாளை அங்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News March 20, 2026

தன்னுடைய செல்வாக்கை உயர்த்துவாரா OPS?

image

தென்மாவட்டங்களில் உள்ள முக்குலத்தோர் சமூக வாக்கு வங்கியை திமுகவுக்கு கொண்டு வரும் பொறுப்பு OPS-க்கு வழங்கப்பட்டுள்ளதாம். இதற்காகவே தென்மாவட்டங்களில் OPS அதிக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். அப்போது, அந்தந்த பகுதி சமூக தலைவர்களுடனும் OPS தனியாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளாராம். இதன் மூலம் தனது செல்வாக்கையும் தென்மாவட்டங்களில் உயர்த்த OPS திட்டமிட்டுள்ளதாக விமர்சகர்கள் கூறுகின்றனர்.

News March 20, 2026

MGR, ஜெ., சிலைகளுக்கு கிளவுஸ் போட்ட அதிகாரிகள்

image

அரசியல் கட்சிகளின் வேண்டுகோளை ஏற்று, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்க தேவையில்லை என ECI அறிவித்தது. இதையடுத்து மதுரையில் Ex CM MGR & ஜெயலலிதா சிலைகளை மூடியிருந்த துணிகளை அதிகாரிகள் அகற்றினர். எனினும் அவர்களின் கை விரல்கள் அரசியல் சின்னத்தை (இரட்டை இலை) குறிப்பதாக கூறி, கைகளை மட்டும் ‘கிளவுஸ்’ போல துணியால் மறைத்துள்ளனர். இந்த விஷயம் SM-ல் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுகுறித்து உங்க கருத்து என்ன?

News March 20, 2026

போன்களில் Pre-install-ஆக வரும் ஆதார் ஆப்?

image

போன்களில் Clock, Calculator போலவே ஆதார் ஆப்பையும் Pre-install முறையில் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது குறித்து, ஜனவரியில் செல்போன் உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய அரசு Email அனுப்பியுள்ளது. ஆனால், இதனால் தனியுரிமை பாதிக்கப்படும் என்றும், இந்தியாவில் விற்பனை செய்வதற்காகவே தனியாக தயாரிப்பை மேற்கொள்வது சாத்தியமில்லாதது எனக்கூறி சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் இத்திட்டத்தை மறுத்துள்ளன.

error: Content is protected !!