News April 21, 2025

காதல் சுகுமார் தலைமறைவு.. வலைவீசி தேடும் போலீஸ்

image

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம், நகைகளை பெற்று ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். புகாரை விசாரித்த மாம்பலம் மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் சுகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் காதல் சுகுமாரன் தலை மறைவாக, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

Similar News

News January 19, 2026

சர்வதேச திரைப்பட விழாவில் இளையராஜாவுக்கு கௌரவம்

image

அஜந்தா எல்லோரா சர்வதேச திரைப்பட விழாவில் மிக முக்கிய விருதாக கருதப்படும் ‘பத்மபாணி’ இளையராஜாவுக்கு வழங்கப்படுகிறது. ஜன. 28 முதல் பிப். 4-ம் தேதி வரை மும்பை சத்ரபதி சம்பாஜிநகரில் இவ்விழா நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளன்று தேசிய, சர்வதேச கலைஞர்கள் முன்னிலையில் இளையராஜா கௌரவிக்கப்படுவார். இதில் பத்மபாணி நினைவுப் பரிசு, கௌரவப் பத்திரம் மற்றும் ₹2 லட்சம் ரொக்கம் அவருக்கு வழங்கப்படும்.

News January 19, 2026

BREAKING: தொடர்ந்து 4 நாள்கள் இயங்காது

image

வாரத்தில் ஐந்து நாள்கள் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி, வரும் 27-ம் தேதி நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு வங்கி கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. ஜன.24 (4-வது சனி), ஜன.25 (ஞாயிற்றுக்கிழமை), ஜன.26 (குடியரசு தினம்) ஆகிய தேதிகளில் ஏற்கெனவே தொடர் விடுமுறை வருகிறது. 27-ம் தேதி ஸ்டிரைக் அறிவிக்கப்பட்டதால் வங்கிகள் 4 நாள்கள் இயங்காது. எனவே, வங்கி தொடர்பான பணிகளை விரைவாக முடித்துவிடுங்கள்.

News January 19, 2026

டெல்லி புறப்பட்டார் அண்ணாமலை

image

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். பாஜகவின் தேசிய தலைவர் பதவிக்கு தற்போதைய செயல் தலைவராக இருக்கும் நிதின் நபின் மட்டுமே விண்ணப்பித்து இருந்தார். இதனால், நாளை காலை 11 மணிக்கு PM மோடி தலைமையில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படவுள்ள நிலையில், கட்சித் தலைமை அழைப்பின் பேரில் அண்ணாமலை விரைந்துள்ளார்.

error: Content is protected !!