News April 3, 2024

கச்சத்தீவு என் பாட்டன் சொத்து

image

“கச்சத்தீவு என் பாட்டன் சொத்து. இலங்கை அதனை திருப்பிக் கொடுக்க வேண்டும்” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியிருக்கிறார். மயிலாப்பூரில் நாதக வேட்பாளரை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், நடக்கத் தெம்பு இருக்கும்போதே பொறுப்பை கொடுத்து விடுங்கள் என்றும் சக்கர நாற்காலியில் வரும்போது தராதீர்கள் என்றும் வாக்களர்களை கேட்டுக் கொண்டார்.

Similar News

News December 31, 2025

3 நாள்களில் தங்கம் விலை ₹4,400 குறைந்தது

image

தங்கம், வெள்ளியின் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்துவந்த நிலையில், தற்போது சரிவை சந்தித்து வருகிறது. அதன்படி, கடந்த 3 நாள்களாக 1 சவரன் தங்கத்தின் விலை ₹4,400 குறைந்து, தற்போது ₹1,00,400-க்கு விற்பனையாகி வருகிறது. 1 கிலோ வெள்ளியின் விலை ₹27,100 வரை குறைந்து, தற்போது ₹2,57,900-க்கு விற்பனையாகி வருகிறது. பொங்கல் வரை தங்கம், வெள்ளியின் விலை படிப்படியாக குறையலாம் என வணிகர்கள் சொல்கின்றனர்.

News December 31, 2025

விஜய்யை மறைமுகமாக சாடிய வானதி

image

NDA கூட்டணி பலமாக இல்லை என்று கருத்துருவாக்கம் செய்யப்படுவதாக வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். திமுகவை வீழ்த்த NDA-வில் தற்போது இருக்கும் கட்சிகளே போதும் என சொல்ல மாட்டேன் என்ற அவர், அதிமுக-பாஜக கூட்டணியால் மட்டுமே திமுகவை வீழ்த்த முடியும் எனவும் கூறியுள்ளார். மேலும், திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொல்பவர்களால் அதை தனியாக செய்யமுடியுமா என்பதும் சந்தேகமே என கூறி விஜய்யை மறைமுகமாக சாடியுள்ளார்.

News December 31, 2025

2026-ல் இந்தியா விளையாடும் ODI தொடர்கள்!

image

இந்திய அணிக்கு, 2025 பிளாக்பஸ்டர் ஆண்டாக அமைந்தது. இந்த நிலையில்தான், 2026-ல் இந்திய அணி விளையாடும் ODI தொடர்களின் லிஸ்ட் வெளிவந்துள்ளது. இந்தியாவில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை ஆகிய அணிகள் விளையாடவுள்ளன. அதே போல, இங்கிலாந்து & நியூசிலாந்துக்கு இந்தியா சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது. இவை அனைத்துமே 3 போட்டிகள் கொண்ட தொடர். 2025-யை போலவே 2026-லும் கோலோச்சுமா இந்தியா?

error: Content is protected !!