News April 30, 2025
க.பொன்முடி வெளியே.. கௌதம சிகாமணி உள்ளே?

2026-ல் பொன்முடியை கழட்டிவிடும் முடிவில் இருக்கிறதாம் திமுக. சர்ச்சை பேச்சால் கட்சிப் பதவியை இழந்தவர், இப்போது அமைச்சர் பதவியையும் இழந்து நிற்கிறார். இந்நிலையில், பொன்முடிக்கு பதிலாக 2026-ல் அவருடைய மகன் கௌதம் சிகாமணி திருக்கோயிலூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்கிறார்கள். இதனால் தான், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லையாம். எதிர் கோஷ்டிகளை மகனை கொண்டு சமாளிப்பாரா பொன்முடி?
Similar News
News January 16, 2026
தேர்தல் வரும்போது மட்டும் தமிழர்கள் நினைப்பு: கனிமொழி

பொங்கலை முன்னிட்டு PM மோடியும், அமித்ஷாவும் நேற்று வாழ்த்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தேர்தல் வரும்போது மட்டும் தமிழர்களை பற்றியும், தமிழ் பண்டிகைகளை பற்றியும் மத்திய அரசுக்கு நினைவு வருவதாக கனிமொழி விமர்சித்துள்ளார். தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க நினைப்பவர்களைத் தமிழர்கள் நம்பி ஏமாறத் தயாராக இல்லை எனவும், அவர்களை பற்றி பேசுவதில் பயனில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
News January 16, 2026
இன்றைய நல்ல நேரம்

▶ஜனவரி 16, தை 2 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:30 AM – 10:30 AM & 1:30 PM – 2:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:30 AM – 1:30 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: த்ரயோதசி ▶பிறை: தேய்பிறை ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம்.
News January 16, 2026
வேலை கிடைக்காததற்கு இது தான் காரணமா?

இந்தியாவில் உள்ள 75% கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு தேவைப்படும் திறன் கொண்ட மாணவர்களை உருவாக்கவில்லை என TeamLease EdTech ஆய்வில் தெரியவந்துள்ளது. நாடு முழுவதும் 1,071 கல்வி நிறுவனங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. அதில், 16.67% கல்லூரிகளில் படித்தவர்கள் தான் பட்டம் பெற்ற 6 மாதங்களுக்குள் வேலை பெறுகின்றனர். பாடத்திட்டம், தொழில்துறை தேவைக்கு இடையேயான இடைவெளியே இதற்கு காரணமாக அமைந்துள்ளது.


