News March 21, 2024

ரசிகை கேள்விக்கு நச்சுனு பதில் சொன்ன ஜோதிகா

image

சமூக வலைதளங்களில் ரசிகர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, திரைப் பிரபலங்கள் பதிலளித்து வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகை ஒருவர் கேட்ட கேள்விக்கு, நடிகை ஜோதிகா ‘நச்’ என்று பதிலளித்துள்ளார். “நான் சூர்யாவின் 15 வருட ரசிகை. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்தில் வருவது போல், சூர்யாவை எனக்கு ஒரு நாள் கடன் தருவீர்களா?” என கேட்டதற்கு, “அதற்கு வாய்ப்பில்லை” என தெரிவித்துள்ளார்.

Similar News

News April 28, 2025

போர் பதற்றம்… கூடும் நாடாளுமன்ற நிலைக்குழு

image

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே <<16241905>>பதற்றம் <<>>நீடித்து வருகிறது. இதனிடையே பாதுகாப்பு துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இன்று மாலை கூடுகிறது. இதில் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

News April 28, 2025

கேரளாவில் பதற்றம்… வெடிகுண்டு மிரட்டல்

image

கேரளாவில் தலைமைச் செயலகம், முதல்வர் அலுவலகம், போக்குவரத்துறை ஆணையர் அலுவலம் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் இறங்கியுள்ளனர். மே 2-ம் தேதி PM மோடி கேரளா செல்ல உள்ள நிலையில் இந்த மிரட்டல் வந்துள்ளதால் பதற்றம் அதிகரித்துள்ளது.

News April 28, 2025

PM மோடியை விமர்சித்த பாடகி மீது வழக்குப்பதிவு

image

பஹல்காம் தாக்குதல் விவகாரத்தில் PM மோடியை விமர்சித்த போஜ்புரி பாடகி நேஹா சிங் ரத்தோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘மோடி இப்போது பீகாரில் பஹல்காம் தாக்குதலின் பெயரில் வாக்கு சேகரிப்பார்’ என்று நேஹா கூறியிருந்தார். இந்த வீடியோ பாக். பத்திரிகையாளர்கள் குழு நடத்தும் X ஹேண்டில் வெளியானதை அடுத்து, தேசிய ஒருமைப்பாட்டை குலைப்பதாக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!