News December 23, 2025
JUSTIN: நீலகிரி மக்களே: அதிரடித் தடை!

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் தற்போது கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. குறிப்பாக தலைக்குந்தாவில், காமராஜர் சாகர் அணையை ஒட்டியுள்ள புல்வெளியில், அதிகப்படியான பனிப்பொழிவு காணப்படுவதால், அதைக் காண சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் நீரோடை மற்றும் புதை மண் பகுதி அருகில் இருப்பதால், வனத்துறையினர் இன்று முதல் அப்பகுதிக்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்துள்ளனர்.
Similar News
News December 25, 2025
சேரங்கோடு பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்த மகிழுந்து

சேரங்கோடு மண்டசாமி கோவில் அருகே தேவாலாவில் இருந்து கேரளா நோக்கி சென்ற KL550216 பதிவென் கொண்ட கார், கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், கணவன் மனைவி 2 குழந்தைகள் உட்பட 4 பேரும் பலத்த காயத்துடன், கேரளா மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து சேரம்படி காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
News December 25, 2025
தலை குந்தாவிற்கு செல்ல வனத்துறை கட்டுப்பாடு!

நீலகிரியின் காஷ்மீர் என அழைக்கப்படும் தலைகுந்தா வனப்பகுதிக்கு செல்ல வனத்துறையினர் நேற்று முதல் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். புல்வெளிகள் மற்றும் வனப்பகுதிக்குள் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல முழுமையாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கூறியுள்ளனர்.