News December 28, 2025
JUSTIN: தென்காசியில் பால் விலை உயர்வு

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதி முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் பொதுமக்கள், பால் விற்பனையாளர்கள் கவனத்திற்கு பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் ஜனவரி 1ம் தேதி (01.01.2026) முதல் பால் கொள்முதல் விலையை விட ஓன்றுக்கு 40 ரூபாயாக உயர்த்தி தரும்படி கேட்டுக்கொள்கிறோம் என்று அறிவிப்பு செய்துள்ளனர்.
Similar News
News January 27, 2026
கடையம் கவுன்சிலர் தற்கொலை குறித்து விசாரிக்க வலியுறுத்தல்

கடையம் சொக்கடித்தெருவை சேர்ந்த மாரிகுமார் கடையம் யூனியன் கவுன்சிலர், காங்கிரஸ் கட்சியில் பொறுப்பும் வகித்து வந்தார். இவர் கடன் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் இவரது தற்கொலைக்கான காரணம் குறித்து வாட்ஸ் அப்பில் புதிய தகவல் பரவி வருகிறது. இதன் பின்னணி குறித்து கண்டறிய எஸ்பி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாட்ஸ் அப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்ட சம்பவம் வைரலாகி வருகிறது.
News January 27, 2026
தென்காசி: காலி இடம் இருக்கா; அரசு வழங்கும் ரூ.50,000 – APPLY..!

தமிழக அரசு எரிசக்தி உற்பத்தியை பெருக்கவும், காலி இடங்களுக்கு வருமானம் கிடைக்கவும் இந்தத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.20,000 – 50,000 வரை ஏக்கருக்கு வருடத்திற்கு கிடைக்கும்.
1. இங்கு <
2. நில உரிமையாளர் என்பதை தேர்ந்தெடுங்க
3. நிலத்தின் மாவட்டம், வட்டம், கிராமம் மற்றும் சர்வே எண், FMB ஆகியவற்றை பதிவு செய்யுங்க. உங்களை அதிகாரிகளை தொடர்பு கொள்வார்கள். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க..
News January 27, 2026
தென்காசி விடுமுறை விடாத 67 நிறுவனங்கள் மீது நடவடிக்கை

தென்காசி மாவட்டத்தில் குடியரசு தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் உதவி ஆணையர் திருவள்ளுவன் தலைமையில் 162 இடங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் விதிமீறலில் ஈடுபட்ட 67 நிறுவனங்கள் கண்டறியப்பட்டன. அந்த உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.


