News January 25, 2025
நீதியும், சமத்துவமும் நமது பாரம்பரியம்: முர்மு

நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் நமது பாரம்பரியத்தின் ஒரு பகுதி என குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அவர், முற்காலத்தில் அறிவு, திறன்களின் ஆதாரமாக இந்தியா இருந்ததாகவும், தொடர் முயற்சிகளால் காலனித்துவ மனநிலை மாறி வருவதாகவும் கூறியுள்ளார். அரசியலமைப்பு நம்மை குடும்பமாக இணைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 28, 2025
BCCI-க்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய சீக்கா!

சீனியர் வீரர்களை BCCI தவறாக கையாள்வதாக சீக்கா சாடியுள்ளார். சீனியர் வீரர்களான கோலியும், ரோஹித்தும் ஓய்வு அறிவித்த போது அவர்கள் முறையாக வழியனுப்பபட்டார்களா எனவும், BCCI அவர்களிடம் இதுகுறித்து பேசியிருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புஜாராவிற்கும் இதேதான் நடந்ததாகவும், வீரர்கள் – BCCI இடையே தகவல் தொடர்பு இடைவெளி இருக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
News August 28, 2025
சற்றுமுன்: திமுக மூத்த தலைவர் காலமானார்

திமுக மூத்த தலைவரும், செயற்குழு உறுப்பினருமான குளித்தலை சிவராமன்(83) இன்று காலமானார். கரூரில் வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ள திமுக முப்பெரும் விழாவில் இவருக்கு பாவேந்தர் விருது வழங்கப்பட இருந்தது. இந்நிலையில், உடல்நலக் குறைவால் உயிரிழந்த அவருக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், கருணாநிதியின் தீவிர பற்றாளரான சிவராமன், தன் மீது தூய அன்பை வெளிப்படுத்தி வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
News August 28, 2025
குஷ்பூ குடும்பம் எப்படி மாறிவிட்டது பாருங்க..

நடிகை குஷ்பூவின் குடும்ப போட்டோ நெட்டிசன்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு குஷ்பூ வெளியிட்ட புகைப்படத்தில், குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் உடல் எடையை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது. முன்னதாக, தனது முழங்கால் பாரமாக இருப்பதால், உடல் எடையை குறைக்க டாக்டர்கள் அறிவுறுத்தியிருந்ததாக அவர் கூறியிருந்தார். தற்போது அனைவரும் உடல் எடையை குறைத்து சர்ப்பரைஸ் கொடுத்துள்ளனர்.