News August 25, 2024

ஒரே ஒரு ஜூஸ் போதும்.. ஹீமோகுளோபின் எகிறும்!

image

இன்றைக்கு வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் ஹீமோகுளோபின் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கான பதிவுதான் இது. கேரட், பீட்ரூட் தலா ஒரு கப், மாதுளை பழத்தின் விதைகள், அரை மூரி துருவிய தேங்காய், ஒரு கப் தண்ணீர் ஆகியவற்றை மிக்சியில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் அதை வடிகட்டி தினமும் காலை ஒரு டம்ளர் குடித்து வந்தாலே, ஹீமோகுளோபின் எகிறும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Similar News

News September 16, 2025

₹100 கோடிக்கு தள்ளாடும் ‘மதராஸி’!

image

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான ‘மதராஸி’ படம், இதுவரை ₹91 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரிலீஸான 2 நாளிலேயே ₹50 கோடி வசூல் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்த நிலையில், 10 நாள்கள் கடந்தும் இன்னும் ₹100 கோடியை தொட முடியாமல் தள்ளாடி வருவதாக கூறப்படுகிறது. ₹150 கோடி பட்ஜெட்டில் படம் உருவானதாக கூறப்படும் நிலையில், தியேட்டர் ரிலீஸ் பெரிதாக லாபத்தை கொடுக்காது என்கின்றனர்.

News September 16, 2025

மைக்ரோவேவ் பாப்கார்ன் சாப்பிட்டால் கேன்சர் வருமா?

image

குறைந்த கலோரி கொண்ட பார்ப்கார்னில் நார்சத்து இருப்பதாக சொல்லப்பட்டாலும் இதனால் கேன்சர் ஏற்படுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக, பாப்கார்ன் பைகளில் உள்ள PFCs என்ற ரசாயனங்களோடு அதை மைக்ரோவேவ்வில் வைப்பதால் கேன்சர் ஏற்படும் அபாயம் இருப்பதாக ஆய்வுகளில் தெரியவந்தது. ஆனால் இவை தற்போது அகற்றப்பட்டுள்ளன என்பதால் கேன்சர் ஏற்படும் அபாயம் இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். SHARE.

News September 16, 2025

TN முழுவதும் சுற்றுப்பயணம் செல்லும் நயினார்!

image

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 தேர்தலில் 30-35 தொகுதிகளில் வெல்ல வியூகம் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக முதற்கட்டமாக 8 இடங்களில் மண்டல அளவில் பூத் கமிட்டி மாநாடுகள் நடத்தப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. வரும் 21-ம் தேதி திண்டுக்கல்லில் முதல் மாநாடு நடத்தப்பட உள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

error: Content is protected !!