News September 30, 2025

சற்றுமுன்: விஜய் அவசர ஆலோசனை

image

தவெக நிர்வாகிகளுடன் விஜய் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். கரூர் சம்பவம் தொடர்பாக தவெகவினர் கைதாகியுள்ள நிலையில், அவர்களை ஜாமினில் வெளியே கொண்டுவர மேற்கொள்ள வேண்டிய சட்ட நடவடிக்கை மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக விஜய் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. விஜய்யின் நீலாங்கரை வீட்டில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நடைபெற்றுள்ளது.

Similar News

News September 30, 2025

3 நாள்கள் தூங்கியது ஏன்? விஜய்க்கு சிபிஐ கட்சி கேள்வி

image

விஜய் வீடியோவில் பேசியுள்ள விஷயத்துக்கு சிபிஐ கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. கரூர் துயரம் நடந்தவுடன் விஜய் சென்னைக்கு ஓடியது ஏன் என்றும், 3 நாள்களாக தூங்கியது ஏன் எனவும் அக்கட்சி கேள்வி எழுப்பியுள்ளது. கரூரில் பிரசாரம் மேற்கொள்ள விஜய் தாமதமாக சென்றது ஏன் எனவும், பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் மன்னிப்பு கேட்கவேண்டும் என அக்கட்சியின் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

News September 30, 2025

தொடர்ந்து 5 நாள் விடுமுறை… அரசு அறிவிப்பு

image

அக்.1 (புதன்) ஆயுதபூஜை, அக்.2 விஜயதசமி ஆகிய இரு தினங்களும் அரசு விடுமுறை நாள்களாகும். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு சென்றுவரும் வகையில், வெள்ளிக்கிழமை (அக்.3) அன்றும் விடுமுறை தினமாக அரசு அறிவித்துள்ளது. அதன்பின், சனி, ஞாயிறு விடுமுறைகளாக இருப்பதால், அரசு ஊழியர்கள், மாணவர்களுக்கு தொடர்ந்து 5 நாள்கள் விடுமுறை கிடைத்துள்ளது. அரசு அலுவலர்களின் கோரிக்கையை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News September 30, 2025

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு: IMD

image

அந்தமான் கடற்பகுதியில் உருவாகக்கூடிய வளிமண்டல சுழற்சியால், வங்கக்கடல் பகுதியில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்.2-ல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் அக். 3 வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!