News September 30, 2025
ரூபாய் மதிப்பு கடும் சரிவு

அந்நிய நிதி வெளியேற்றம் போன்ற பல்வேறு காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 காசு சரிந்து ₹88.79ஆக உள்ளது. இந்தியா தனது பெரும்பாலான இறக்குமதிகளுக்கு டாலரில் பணம் செலுத்துகிறது. டாலர் மதிப்பு உயர்வதால், இந்தியாவின் இறக்குமதி செலவினம் அதிகரிக்கும். இதனால், சமையல் எண்ணெய், பருப்பு, எரிவாயு உள்ளிட்டவற்றிற்கு அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். இது சாமானிய மக்களை கடுமையாக பாதிக்கும்.
Similar News
News September 30, 2025
லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக ரிசர்வ் வங்கியின் MPC கூட்டத்தில் முடிவெடுத்து, நாளை அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அக்டோபர் தொடக்க நாளான நாளை வட்டி குறைப்பு அறிவிப்பு வெளியானால், தனிநபர் கடன், வீடு மற்றும் வாகன கடன்களுக்கான வட்டியும் குறையும். இது லோன் வாங்கியவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News September 30, 2025
₹35,000 சம்பளம்: தமிழக அரசில் 1,096 பணியிடங்கள்

தமிழ்நாடு அரசு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநரகத்தில் காலியாகவுள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர், சிறப்பு கல்வியியலாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 1,096 பணியிடங்களை அறிவித்துள்ளது. கல்வித்தகுதி: 10th, டிகிரி. சம்பளம்: ₹12,000 – ₹35,000 வரை (பதவிகளுக்கேற்ப). விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்.14. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News September 30, 2025
முன் ஜாமீன் கோரும் N.ஆனந்த்

கரூர் பிரசார கூட்டத்தில் விதிமுறைகள் மீறியதாக தவெக நிர்வாகிகள் N.ஆனந்தும், CTR.நிர்மல் குமாரும் கைது செய்யப்படலாம் என கூறப்பட்டது. இந்நிலையில், இவர்கள் இருவரும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் காலை 10.30 மணிக்கு முன் ஜாமீன் கோரி மனு அளிக்கவுள்ளனர். ஏற்கெனவே போலீசாரால் கைது செய்யப்பட்ட மாவட்ட செயலாளர் மதியழகன், பவுன்ராஜ் ஆகியோரும் ஜாமீன் கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.