News October 28, 2025
திறனாய்வு தேர்வு… பள்ளிகளுக்கு பறந்த உத்தரவு

ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயிலும் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கான <<18121808>>திறனாய்வுத் தேர்வு<<>> அறிவிப்பு வெளியாகியுள்ளது. www.dge.tn.gov.in இணையதளத்தில் இன்று முதல் விண்ணப்பங்கள் டவுன்லோடு செய்யப்பட்டு வருகின்றன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை தேர்வுக் கட்டணம் ₹10 செலுத்தி, நாளை முதல் பள்ளி HM-களிடம் மாணவர்கள் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. நவ.4 வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 29, 2025
₹44,900 சம்பளம்.. உடனே அப்ளை பண்ணுங்க

புலனாய்வு துறையில் உள்ள 258 கிரேடு 2 தொழில்நுட்ப பிரிவு பணிகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கல்வித்தகுதி: எலக்ட்ரிக்கல், டெலி கம்யூனிகேஷன் உள்ளிட்டவற்றில் டிகிரியுடன் கேட் தேர்ச்சி கட்டாயம். வயது வரம்பு: 18 – 27. சம்பளம்: ₹44,900 – ₹1,42,400. விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.16. மேலும் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கே <
News October 29, 2025
களத்திற்கு செல்லாத ராகுல்.. அச்சம் என விளாசும் NDA!

பிஹாரில் அடுத்த வாரம் தேர்தலை வைத்து கொண்டு ராகுல், பிரசார களத்திற்கு செல்லாதது காங்கிரஸ் கட்சியினரையே அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்தி கொண்ட பாஜக, ஜேடியூ தலைவர்கள், ராகுல் காந்தி அச்சத்தில் ஓடி ஒளிந்து கொண்டதாக சாடி வருகின்றனர். ஏற்கெனவே கூட்டணியில் தேர்தலை சந்திக்கும் RJD, காங்கிரஸ் 10 தொகுதியில் எதிர்த்து போட்டியிடுவதால் கூட்டணியின் ஒற்றுமையின்மை என பேசுபொருளாகியுள்ளது.
News October 29, 2025
வருண்குமார் IPS கவுன்சிலிங் போக வேண்டும்: சீமான்

வருண்குமார் IPS, தனக்கெதிராக தாக்கல் செய்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என MHC-ல் சீமான் தெரிவித்துள்ளார். வருண்குமார் மனநல ஆலோசனை பெறும் நேரம் வந்துவிட்டதாக குறிப்பிட்ட அவர், விமர்சனங்களை தாங்கிக் கொள்ள முடியாத ஒருவர் எப்படி IPS ஆனார் என்றும், பதில் மனுவில் கேள்வி எழுப்பியுள்ளார். வரதட்சணை கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் சிறை சென்றவர் தான் வருண்குமார் என்றும் சீமான் விமர்சித்துள்ளார்.


