News September 27, 2025
தவெக தலைவர் விஜய் கைது ஆகிறாரா?

கரூரில் 29 பேர் பலியான சம்பவம் விஜய்க்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ‘புஷ்பா-2’ திரைப்பட ரிலீஸின்போது ஹைதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் பலியான வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டார். அதேபோல் விஜய்யும் கைது செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னதாக தவெக பிரச்சார கூட்டத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் கட்சி தலைவரே பொறுப்பு என ஐகோர்ட் கூறியிருந்தது.
Similar News
News January 22, 2026
கணவரை கொன்றுவிட்டு ஆபாச படம் பார்த்த மனைவி

‘என் கணவர் மாரடைப்பால் இறந்துவிட்டார்’ என மனைவி கூற, உறவினர்களும் நம்பியுள்ளனர். ஆனால் கணவர் காதின் அருகில் இருந்த ரத்தம் சந்தேகத்தை எழுப்ப, போலீஸ் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியது. அதில், காதலனுடன் சேர்ந்து கணவரை மனைவி கொன்றது தெரியவந்துள்ளது. அத்துடன், கணவரின் சடலம் அருகிலேயே அமர்ந்து இரவு முழுவதும் மனைவி ஆபாச படம் பார்த்துள்ளார். ஆந்திராவில் நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
News January 22, 2026
இபிஎஸ்-ஐ ஆதரிக்க சசிகலா முடிவு!

அதிமுகவில் நடந்து வந்த ஒருங்கிணைப்பு, ஒற்றைத் தலைமை, துரோகி என்ற சண்டைகள் எல்லாம் தற்போது பங்காளி சண்டை எனப் பதம் மாறியுள்ளன. நேரடியாக ஒருங்கிணைப்பு இல்லாவிட்டாலும், திமுகவுக்கு எதிரான வெற்றி என்ற நிலைப்பாட்டுடன் இபிஎஸ்-க்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை TTV எடுத்துள்ளார். சசிகலாவும் அதே மனநிலையில் இருப்பதாகவும், தனது ஆதரவாளர்களிடம் இது குறித்து நேற்று பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
News January 22, 2026
சிம்பு – ஏ.ஆர்.முருகதாஸ் காம்போவில் புதிய படம்!

‘அரசன்’படத்தில் பிஸியாக உள்ள சிம்புவிடம் ஏ.ஆர்.முருகதாஸ் ஒரு கதையை சொல்லி ஓகே செய்துள்ளார். ‘அரசன்’ படம் முடிந்த கையோடு அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. இதன்மூலம் இந்த வருடம் ‘அரசன்’ அடுத்த வருடம் ஏ.ஆர்.முருகதாஸ் படம் என அடுத்தடுத்து சிம்புவின் நடிப்பில் 2 முக்கியமான படங்கள் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


