News November 18, 2024
JUST NOW: அதிமுகவில் மீண்டும் EX அமைச்சர் தளவாய் சுந்தரம்

அதிமுகவில் EX அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நடைபெற்ற ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்ததால் அவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இபிஎஸ் நீக்கினார். குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில், வருத்தம் தெரிவித்ததையடுத்து தற்போது அமைப்பு செயலாளர், மாவட்ட செயலாளராக அவரை இபிஎஸ் நியமித்துள்ளார்.
Similar News
News August 17, 2025
தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் கூடாது: திருமா

தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தை அடுத்து 6 அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் தங்களின் சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என அவர்கள் கூறினர். இந்நிலையில், ‘பணி நிரந்தரம் செய்யுங்கள்’ என்பது ‘குப்பை அள்ளுபவனே தொடர்ந்து அள்ளட்டும்’ என்ற கருத்துக்கு வலுசேர்ப்பதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார். எனவே அவர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News August 17, 2025
பாபர், ரிஸ்வான் OUT.. ஆசிய கோப்பை PAK அணி!

ஆசிய கோப்பைக்கான PAK அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், பாபர் அசாம் & முகமது ரிஸ்வான் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 15 பேர் கொண்ட PAK அணி: சல்மான் அலி ஆகா (கேப்டன்), முகமது ஹாரிஸ், அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ரௌஃப், ஹாசன் அலி, ஹாசன் நவாஸ், உசைன் தலத், குஷ்தில் ஷா, முகமது நவாஸ், முகமது வசீம், சாஹிப்ஸாதா ஃபர்ஹான், அப்ரிடி, சுஃப்யான் மோகிம், சைம் அயூப் & சல்மான் மிர்சா.
News August 17, 2025
51-வது வயதில் பிரபல நடிகைக்கு 2-வது திருமணம்?

நடிகை மலைக்கா அரோரா தனது 2-வது திருமணம் குறித்து மனம் திறந்துள்ளார். தான் மிகவும் ரொமான்டிக் எனவும் தனக்கு காதல் மீது நம்பிக்கை இருப்பதாகவும், ‘So never say never’ என தெரிவித்தார். 51 வயதான மலைக்கா, 1998-ல் அர்பாஸ் கானை திருமணம் செய்து கொண்டு, 2017-ல் விவாகரத்து பெற்றார். 2018-ல் அவர் நடிகர் அர்ஜுன் கபூரை டேட்டிங் செய்ததாகவும் கூறப்பட்டது. இவர் தமிழில் ‘தையா தையா’ பாடலுக்கு நடனமாடி இருந்தார்.