News April 4, 2025
இப்போதுதான் ரூ.50 கோடி.. விக்ரம் மார்க்கெட் என்னாச்சு?

விக்ரமின் வீர தீர சூரன் படம், 7 நாட்களில் ரூ.52 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோர்ட் தடை காரணமாக முதல் நாள் (மார்ச் 27) மாலையில்தான் படம் வெளியானது. நல்ல விமர்சனத்தை பெற்ற போதும், ஒரு பெரிய நடிகரின் படத்துக்கான வசூல் இது இல்லையோ என்ற கேள்வி எழுகிறது. பிரதீப் ரங்கநாதனின் படமே 3 நாட்களில் ரூ.50 கோடி வசூலிக்கும்போது, விக்ரமிற்கு இது கம்மி என நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.
Similar News
News April 4, 2025
கச்சத்தீவு கைவிட்டுப் போக காரணமே திமுகதான்: விஜய்

கச்சத்தீவு மீண்டும் நமக்கு சொந்தமாவது மட்டும்தான் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு ஒரே பரிகாரம், தீர்வு என விஜய் தெரிவித்துள்ளார். திமுகவின் ஆட்சி அதிகார பசியால் கச்சத்தீவு கைவிட்டு போனதாக குற்றம் சாட்டிய அவர், நிரந்தர தீர்வு எட்டும்வரை 99 வருட குத்தகையாக கச்சத்தீவை பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இலங்கை செல்லும் PM மோடி இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News April 4, 2025
ஈரோடு மாவட்டத்திற்கு விடுமுறை

பண்ணாரி மாரியம்மன் குண்டம் திருவிழாவை முன்னிட்டு, வரும் 8ஆம் தேதி ஈரோடு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில், வரும் 26ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இந்த விடுமுறை அறிவிப்பு பொருந்தாது.
News April 4, 2025
ஹன்சிகா வழக்கு.. காவல்துறைக்கு உத்தரவு

ஹன்சிகா மீது அவரது நாத்தனார் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னை கணவருடன் சேர்ந்து வாழவிடாமல் ஹன்சிகாவும் அவரது தாயாரும் தடுப்பதாக தெரிவித்திருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த நிலையில், அதனை ரத்து செய்யக் கோரி இருவரும் நீதிமன்றம் சென்றனர். இதையடுத்து காவல்துறை பதிலளிக்க கோரி வழக்கை ஜூலை 3ஆம் தேதிக்கு மும்பை ஐகோர்ட் ஒத்திவைத்தது.