News September 20, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2000 உயர்ந்தது

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியதால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒரு கிராம் வெள்ளி விலை ₹2 உயர்ந்து, ₹145-க்கும், கிலோ வெள்ளி ₹2000 உயர்ந்து ₹1,45,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு வெள்ளி விலை விற்கப்படுவது இதுவே முதல்முறை. குறிப்பாக, கடந்த 2 நாள்களில் மட்டும் ₹4,000 அதிகரித்துள்ளது.

Similar News

News September 20, 2025

விஜய்யின் தனி விமானத்தின் விலை என்ன தெரியுமா?

image

தொலைதூர சினிமா ஷூட்டிங் ஸ்பாட்களுக்கு தனி விமானத்தில் சென்று கொண்டிருந்தார் விஜய். இந்நிலையில், தேர்தல் பிரசாரத்திற்காகவும், குறிப்பிட்ட இடத்திற்கு செல்லும்போது, அருகிலுள்ள ஏர்போர்ட்டுக்கும் தனி விமானம் மூலமே செல்கிறார். இதன் விலை ₹8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அத்துடன், ஒருமுறை இந்த விமானத்தில் பயணிக்க ₹14 லட்சம் வரை செலவாவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News September 20, 2025

10-வது போதும்.. ₹25,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

IGI Aviation Services-ல் காலியாக உள்ள 429 Loaders பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 20- 40 வயதுக்குட்பட்ட 10-வது தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். எழுத்து & நேர்முக தேர்வின் மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹15,000- ₹25,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். நண்பர்களுக்கு பகிருங்கள்.

News September 20, 2025

வங்கி வாடிக்கையாளர்களுக்கு GOOD NEWS

image

சேவை கட்டணத்தை குறைக்க வங்கிகளுக்கு RBI அறிவுறுத்தியுள்ளது. பல கோடி மக்கள் வாழும் நாட்டில், வங்கிகளின் அதிக சேவை கட்டணத்தால், குறைந்த வருமானம் பெறுபவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இதை கருத்தில் கொண்டு, டெபிட் கார்டு, சேமிப்பு கணக்குகளில் குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிப்பு, தாமத பணம் செலுத்துதல் ஆகியவற்றுக்கான சேவை கட்டணத்தை குறைக்க அறிவுறுத்தியது. ஆனால், அதற்கான வரம்பை RBI நிர்ணயிக்கவில்லை.

error: Content is protected !!