News September 29, 2025

சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1000 உயர்வு..

image

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று 1 கிராம் வெள்ளி ₹1 அதிகரித்து ₹160-க்கும், கிலோ வெள்ளி ₹1000 அதிகரித்து ₹1,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 10 நாள்களில் மட்டும் வெள்ளி விலை சுமார் ₹15,000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News September 29, 2025

குஷி ரீ-ரிலீஸால் கடுப்பில் இருக்கிறாரா மும்தாஜ்?

image

குஷி ரீ ரிலீஸால் மும்தாஜ் டென்ஷனில் இருப்பதாக சினிமா வட்டாரத்தினர் கூறுகின்றனர். சினிமாவுக்கு முழுக்கு போட்டு ஆன்மிகம் பக்கம் சென்ற அவரை, இந்த ரீ-ரிலீஸால் ரசிகர்கள் மீண்டும் தேடத்தொடங்கியிருக்கின்றனர். அதோடு, கடந்த வாரம் நடந்த ரீ ரிலீஸ் புரமோஷனில் ‘கட்டிப்புடி கட்டிப்புடிடா’ பாடல் ஒளிபரப்பப்பட, சிலர் அப்பாடலை ஒன்ஸ்மோர் கேட்டு ரசித்தனர். இதுதான் மும்தாஜின் தூக்கம் கெட காரணம் என்கின்றனர்.

News September 29, 2025

கரூரில் 2-வது நாளாக தொடரும் விசாரணை

image

ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் 2-வது நாளாக கரூரில் விசாரணை மேற்கொண்டுள்ளார். நேற்று கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், இன்று உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களுடைய உறவினர்களிடம் கூட்டத்திற்கு சென்ற நேரம், தொடர்புகொள்ள முடிந்ததா உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தார். மேலும், அவருக்கு உதவ 5 பேர் கொண்ட குழுவினர் இதர தகவல்களை சேகரித்து வருகின்றனர்.

News September 29, 2025

கரூர் துயரம்.. FIR-ல் வெளியான புதிய தகவல்

image

கரூர் துயர சம்பவம் தொடர்பான FIR-ல், தனது அரசியல் பலத்தை பறைசாற்ற விஜய் 4 மணி நேரம் காலதாமதம் செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பரப்புரை நடந்த இடத்தில் கூட்டத்தில் மிதிபட்டு 11 பேர் உயிரிழந்தனர். நெரிசல் அதிகரித்ததால் உயிர் சேதம் ஏற்படுமென எச்சரித்தும் நிர்வாகிகள் கேட்கவில்லை. அசாதாரண சூழலை எச்சரித்தும் TVK பொதுச் செயலாளர் ஆனந்த் காதில் வாங்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!