News September 27, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹6000 உயர்வு

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிராமுக்கு ₹6 உயர்ந்து ₹159-க்கும், கிலோ வெள்ளி ₹6000 உயர்ந்து ₹159,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரே நாளில் ₹6 ஆயிரம் உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 2 நாள்களில் மட்டும் வெள்ளி விலை ₹9 ஆயிரம் அதிகரித்துள்ளது.
Similar News
News September 27, 2025
திடீர்’னு பெட்ரோல் காலியா? Fuel@Call ஆப் யூஸ் பண்ணுங்க!

ஆள் அரவமே இல்லாத இடத்தில், திடீரென வண்டியில் பெட்ரோல் காலியாகி நிற்பதை விட கொடுமை வேறெதுவும் இல்லை எனலாம். வெறுப்பேற்றும் இந்த பிரச்னைக்கு இந்தியன் ஆயில் நிறுவனம் தீர்வளித்துள்ளது. அந்நிறுவனத்தின் ‘Fuel@Call’ என்ற ஆப்பின் மூலம், எங்கு இருந்து வேண்டுமானாலும் பெட்ரோல்/டீசல் ஆர்டர் செய்யலாம். உடனே, நேரில் கொண்டுவந்து டெலிவரி பண்ணிடுவாங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள்.
News September 27, 2025
இனி டைரக்டர் வரலட்சுமி.. வெளியான அறிவிப்பு!

திரையில் ஹீரோயினாக வசீகரித்து, வில்லியாக மிரட்டிய வரலட்சுமி சரத்குமார், தற்போது மற்றொரு பரிணாமத்தில் ஈர்க்கவுள்ளார். தோசா டைரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ‘சரஸ்வதி’ என்ற படத்தை அவரே இயக்கி, நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலட்சுமியுடன் பிரகாஷ் ராஜ், பிரியாமணி, நவீன் சந்திரா ஆகியோரும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.
News September 27, 2025
பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

*உடலுக்கு நன்மை தரும் பாக்டீரியாக்கள் அபரிமிதமான அளவில் பழைய சோற்றில் இருக்கின்றன. *இதை சாப்பிட்டால் வயிறு தொடர்பான நோய்கள் குணமாகும். *உடல் உஷ்ணம் குறையும். * இது அதிக நார்ச்சத்து கொண்டிருப்பதால் மலச்சிக்கலை நீக்கும். *உடல் சோர்வை குறைக்கும். *தோல் தொடர்பான வியாதிகளுக்கும் தீர்வு தரும். *இளமைத் தோற்றத்தைத் தக்க வைக்க உதவும். *பழைய சோறு என்றாலும் நீருற்றிய 15 மணி நேரத்திற்குள் சாப்பிடுங்கள்.