News September 23, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹1000 உயர்வு

ஆபரணத் தங்கத்தை தொடர்ந்து, வெள்ளி விலையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. 1 கிராம் வெள்ளி ₹1 அதிகரித்து ₹149-க்கும், கிலோ வெள்ளி ₹1000 அதிகரித்து ₹1,49,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த அளவுக்கு விலை உயர்ந்தது இதுவே முதல்முறை. கடந்த 5 நாள்களில் மட்டும் சுமார் ₹8000 அதிகரித்துள்ளது. வரும் நாள்களிலும் விலை அதிகமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.
Similar News
News September 23, 2025
ஏழைகளுக்கு வீடுகள் கட்டித்தரப்படும்: EPS உறுதி

சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் சூடுபிடித்துள்ள நிலையில், குன்னூரில் EPS பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது குன்னூருக்காக திமுக அரசு எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என குற்றம்சாட்டிய அவர், அதிமுகவின் திட்டங்களை பெயர் மாற்றி திமுக புகழ் தேடிக்கொள்கிறது என பேசினார். மேலும், அதிமுக ஆட்சி அமைந்தால் நீலகிரியில் உள்ள வீடில்லாத ஏழைகளுக்கு கான்கிரீட் வீடு கட்டித்தரப்படும் எனவும் உறுதியளித்தார்.
News September 23, 2025
அக். 14-ல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர்

அக்.14-ம் தேதி தமிழக சட்டமன்ற கூட்டம் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். முதல்நாளில், மறைந்த முன்னாள் MLA-க்கள் 8 பேர் & வால்பாறை MLA-வுக்கு இரங்கல் தெரிவிக்கப்படவுள்ளது. மேலும், 2025-26 கூடுதல் செலவிற்கான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. எத்தனை நாள்கள் கூட்டத்தை நடத்துவது என்பது குறித்து ஆய்வுக்குழுவில் முடிவெடுக்கப்படும் என அப்பாவு தெரிவித்துள்ளார்.
News September 23, 2025
மகளிர் உரிமைத் தொகை.. வந்தது ஹேப்பி நியூஸ்

குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாள்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 21 லட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டை பெற்றவர்கள் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதில் தகுதியான பெண்களுக்கு ₹1000 வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.