News October 21, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2,000 குறைந்தது

விர்ரென ஏறிய வெள்ளி விலை தற்போது மளமளவென சரிந்து வருகிறது. இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ₹2,000 சரிந்துள்ளது. இதனால், 1 கிராம் ₹188-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,88,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த செப்.1-ம் தேதி கிராம் ₹136-க்கு விற்பனையான வெள்ளி கடந்த 15-ம் தேதி வரலாறு காணாத புதிய உச்சமாக ₹207-ஐ தொட்டது. ஆனால், கடந்த 6 நாள்களில் மட்டும் கிராமுக்கு ₹19-ம், கிலோவுக்கு ₹19,000-ம் குறைந்துள்ளது.
Similar News
News March 17, 2026
இலவசமாக வேலைக்கு ஆட்கள் எடுக்க சூப்பர் வாய்ப்பு!

‘ஆட்கள் தேவை’ என போர்டு வைத்தும் உங்கள் கடை அல்லது நிறுவனத்திற்கு பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். எவ்வித கட்டணமுமின்றி WAY2NEWS உங்களுக்காக விளம்பரம் செய்கிறது. சிறு, குறு நிறுவனங்கள், தொழில்முனைவோர், வணிகர்கள் தங்களுக்கு தேவையான விளம்பரத்தை <
News March 17, 2026
19 அதிமுக மூத்த நிர்வாகிகள் பின்வாங்குகிறார்களா?

அதிமுக தனது வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிட உள்ளதாம். இந்நிலையில், விருதுநகர், மதுரை, திருப்பூர், தி.மலை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 19 பேர், தாங்கள் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை 4 முனைப் போட்டி உருவானால், திமுக & விஜய்யை எதிர்த்து தேர்தலில் நிறைய செலவு செய்ய வேண்டியிருக்கும் என்பதே இதற்கு காரணமாம்.
News March 17, 2026
டீச்சருக்கு நடுரோட்டில் கொடூரம்.. தமிழகத்தில் அதிர்ச்சி

நெல்லையில் பட்டப்பகலில் டீச்சரை அவரது கணவரே அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடசேரியில் உள்ள அரசுப் பள்ளியில் டீச்சராக உள்ள முத்துசெல்வி, குடும்பத்தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த சேர்மன்துரை வள்ளியூர் பஸ் ஸ்டாண்டில் இக்கொடூரத்தை அரங்கேற்றியுள்ளார். உயிருக்கு போராடிய டீச்சரை மீட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்தனர்.


