News April 15, 2025
சற்றுமுன்: சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெக்சிகோவில் இருந்து சுமார் 20 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால், கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. இதனால், பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்தனர். இதன் பாதிப்பு விவரம் உடனே வெளியாகவில்லை.
Similar News
News December 2, 2025
டெல்லி குண்டுவெடிப்பு: முக்கிய ஆதாரம் சிக்கியது

11 பேர் உயிரிழந்த டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், முக்கிய ஆதாரம் சிக்கியுள்ளதாக NIA தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் உத்தர பிரதேச மாநிலத்தின் 8 இடங்களில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில் பல டிஜிட்டல் சாதனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இச்சம்பவத்தில் ஏற்கெனவே 7 பேர் கைதாகியுள்ள நிலையில், அல் பலா பல்கலை. நிறுவனர் ஜவாத் அகமதை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News December 2, 2025
கலிலியோ பொன்மொழிகள்!

*எல்லா உண்மைகளையும் அவை கண்டுபிடிக்கப்பட்டவுடன் புரிந்து கொள்வது எளிமையானது. அவற்றைக் கண்டுபிடிப்பதே முக்கியமான விஷயம். *அளவிடக்கூடியதை அளவிடுங்கள். அளவிட முடியாததை அளவிடக் கூடியதாக ஆக்குங்கள். *உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம். *அனைத்து உண்மைகளும் எளிதில் புரிந்துகொள்ள கூடியவையே. ஆனால் முதலில் அதை கண்டுபிடிக்க வேண்டும் அவ்வளவே. *உங்களை நீங்கள் அறிவதே மிகச் சிறந்த ஞானம்.
News December 2, 2025
ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வேண்டாம்: பெ.சண்முகம்

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-அதிமுக அணியை தோற்கடிப்பது தான் தங்களுடைய முதன்மையான பணி என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு, திமுக தங்களுக்கு துணை நிற்கிறது என்றும் அவர் பேசியுள்ளார். மேலும், ஆட்சி அதிகாரத்தில் சிபிஎம் எப்போதுமே பங்கு கேட்காது எனவும் அவர் உறுதிப்பட தெரிவித்துள்ளார். சமீபத்தில், இதே நிலைப்பாட்டை திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவனும் கூறியிருந்தார்.


