News October 6, 2025

சற்றுமுன்: லெஜண்ட் காலமானார்

image

வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திர வீரர் பெர்னார்ட் ஜூலியன் (75) காலமானார். 1975-ல் முதல் உலகக் கோப்பையை WI வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர். ஆஸி., தெ. ஆப்., அணிகள் இவரை பார்த்தே அலறும். WI-க்காக 24 டெஸ்ட்களில் விளையாடி 866 ரன்கள் குவித்து 56 விக்கெட்டுகளை வீழ்த்திய இவர், 12 ஒருநாள் போட்டிகளில், 18 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Similar News

News October 6, 2025

INDvsPAK மேட்ச்.. Ex. இங்கிலாந்து கேப்டனின் சர்ச்சை கருத்து!

image

இந்தியா- பாகிஸ்தான் போட்டிகள் குறித்து, இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் அதர்டன் சொன்ன கருத்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிகள் ஒரு காலத்தில் நட்புரீதியில் இருந்ததாகவும், ஆனால் அது தற்போது அரசியல் ஆதாயத்திற்காக நடத்தப்படுவதாகவும் விமர்சித்துள்ளார். மேலும், ICC தொடர்களில் இவ்விரு அணிகளும் ஒரே குரூப்பில் இடம் பெறக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

News October 6, 2025

அப்போலோவுக்கு சென்றார் முதல்வர் ஸ்டாலின்

image

தலைமைச் செயலகத்தில் இருந்து சென்னை அப்போலோ ஹாஸ்பிடலுக்கு முதல்வர் ஸ்டாலின் சென்றுள்ளார். அப்போலோவில் ஆஞ்சியோ செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வரும் வைகோ ஆகியோரை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அதன்பின் அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

News October 6, 2025

வீட்டிலிருந்தபடியே வருமானம் வேண்டுமா? இதோ திட்டம்

image

வீட்டில் இருந்தபடியே மாதம் ₹9,000 வரை வருமானம் ஈட்ட வேண்டுமா? அதற்கு போஸ்ட் ஆபிஸின் மாதாந்திர வருமானத் திட்டத்தில் முதலீடு செய்யுங்கள். இதில், ₹1 லட்சம் – ₹15 லட்சம் வரை நீங்கள் முதலீடு செய்யலாம். ₹15 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்கு மாதம் ₹9,250 வருமானமாக கிடைக்கும். திட்டம் முதிர்ச்சியடைந்தவுடன் நீங்கள் செலுத்திய ₹15 லட்சம் உங்களுக்கு திருப்பிக்கொடுக்கப்படும். SHARE.

error: Content is protected !!