News October 19, 2025
திமுகவில் இணைந்தனர்

அதிமுக கோட்டையாக இருக்கும் கொங்கு மண்டலத்தில் எப்படியாவது வெற்றிபெற வேண்டும் என்று திமுக திட்டமிட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக மாற்றுக்கட்சிகளில் முக்கிய முகமாக இருப்பவர்களை திமுக தங்கள் பக்கம் இழுக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி முன்னிலையில், அதிமுகவில் இருந்து விலகி 50-க்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
Similar News
News March 20, 2026
பிரீமியம் பெட்ரோல் என்றால் என்ன?

இன்ஜினில் பெட்ரோல் எவ்வளவு smooth-ஆ வேலை செய்கிறது என்பதை காட்டும் அளவுகோலை Octane number என குறிப்பிடுவார்கள். இந்த Octane number சாதாரண பெட்ரோலை விட, பிரீமியம் பெட்ரோலில் அதிகமாக இருக்கும். Octane அதிகமாக இருப்பதால், இன்ஜின் Smooth-ஆகவும், அமைதியாகவும் இயங்கும். மேலும், இன்ஜினின் efficiency-ம் மேம்படும். அதிக திறன் இன்ஜின்களை கொண்ட வாகனங்களுக்கு பிரீமியம் பெட்ரோல் பொருத்தமானது.
News March 20, 2026
7 தொகுதிகளில் திமுக வேட்பாளர்கள் இவர்கள்தான்!

திமுக சார்பில் 7 தொகுதிகளில் தலா ஒருவர் மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்துள்ளதால் அந்த தொகுதிகளில் அவர்கள்தான் வேட்பாளர்கள் என்பது உறுதியாகியுள்ளது. கொளத்தூரில் ஸ்டாலின், சேப்பாக்கத்தில் உதயநிதி, திருச்சியில் மேற்கு- கே.என்.நேரு, திருச்சுழியில் தங்கம் தென்னரசு, மதுரை கிழக்கில் பி.மூர்த்தி, ஆத்தூரில் ஐ.பெரியசாமி, ஒட்டன்சத்திரத்தில் சக்கரபாணி மட்டுமே விருப்பமனு தாக்கல் செய்துள்ளனர்.
News March 20, 2026
CSK அணிக்கு அடுத்தடுத்த ஷாக்!

IPL தொடங்குவதற்கு முன்பாகவே, தொடரில் இருந்து ஆஸி., பவுலர் எல்லிஸ் விலகினார். அவரை தொடர்ந்து தற்போது மற்றொரு ஆஸி., பேட்ஸ்மேனான மேத்யூ ஷார்ட்டும் CSK ரசிகர்களை ஷாக்கில் ஆழ்த்தியுள்ளார். கட்டை விரலில் ஏற்பட்டுள்ள எலும்பு முறிவு காரணமாக முதல் சில ஆட்டங்களில் அவர் விளையாட மாட்டார் என கூறப்படுகிறது. தொடர்ந்து<<19429243>> ஆஸி., வீரர்கள்<<>> காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி வருவது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.


