News October 12, 2025
சற்றுமுன்: திமுகவில் இணைந்தனர்

தேர்தலையொட்டி மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்க்க அனைத்து கட்சி நிர்வாகிகளும் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கிருஷ்ணகிரியில் திமுக மா.செ., மதியழகன் MLA முன்னிலையில் பிற கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். அதிமுக, தவெக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களை திமுக துண்டு போர்த்தி மதியழகன் வரவேற்றார்.
Similar News
News October 13, 2025
இன்றைய நல்ல நேரம்

▶அக்டோபர் 13, புரட்டாசி 27 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM -7:15 AM & 4.45 PM – 5.45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 PM – 12:00 PM ▶குளிகை: 1:30 AM – 3:00 AM ▶திதி: சப்தமி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: தேய்பிறை
News October 13, 2025
திமுகவுக்கு முகூர்த்த தேதி குறிச்சாச்சு: நயினார்

திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட இன்று முகூர்த்த நாள் குறிக்கப்பட்டு விட்டதாக நயினார் சூளுரைத்துள்ளார். திமுக ஆட்சியின் முடிவுக்கு EPS முன்னுரை எழுத, BJP முடிவுரை எழுதும் என்றும் சபதமேற்றார். திமுக ஆட்சிக்கு முடிவெழுத 177 நாள்கள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், திமுகவினர் தமிழை விற்று பிழைத்தவர்கள் என்று காட்டமாக விமர்சித்தார். மேலும், BJP – ADMK கூட்டணி இயற்கையான கூட்டணி என்றும் நயினார் தெரிவித்தார்.
News October 13, 2025
International Roundup: இஸ்ரேல் பணயக் கைதிகள் விடுவிப்பு

*காசா அமைதி உடன்படிக்கை எகிப்தில் இன்று கையெழுத்தாக உள்ளது. *மடகாஸ்கரில் போராட்டக்காரர்களுடன் இணைந்து ராணுவம் ஆட்சியை கைப்பற்ற முயற்சிப்பதாக அந்நாட்டு அதிபர் ஆண்ட்ரி ரஜோலினா தெரிவித்துள்ளார். *தங்கள் வசம் உள்ள மொத்த இஸ்ரேல் பணயக் கைதிகளையும் ஹமாஸ் இன்று விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. *மெக்சிகோ வெள்ளத்தில் 44 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.