News October 4, 2025

சற்றுமுன்: கனமழை வெளுத்து கட்டும்

image

அரபிக் கடலில் உருவான ‘சக்தி’ புயல்’ வலுவடைந்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என IMD மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது. இன்று, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், நாமக்கல், சேலம் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும், நாளை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.

Similar News

News October 4, 2025

பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார்

image

பாலிவுட்டின் பழம்பெரும் நடிகை சந்தியா சாந்தாராம் (94) காலமானார். இவர் இந்தி திரையுலகின் லெஜண்ட் இயக்குநரான மறைந்த வி.சாந்தாராமின் மனைவியாவார். ஜனக் ஜனக் பாயல் பாஜே, நவ்ரங், தோ ஆங்கென் பாரா ஹாத், பின்ஜாரா உள்ளிட்டவை இவர் நடித்த படங்களில் மிக பிரபலமானவை. மிகச்சிறந்த நடிகையான சந்தியா, நடனத்திலும் பெயர் பெற்றவர். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

News October 4, 2025

நீரவ் மோடிக்கு சகல வசதிகளும் கொண்ட சிறை

image

நீரவ் மோடியிடம் ₹13,000 கோடி PNB வங்கி மோசடி குறித்து விசாரிக்கப்பட மாட்டாது என UK அரசிடம் இந்திய அரசு உறுதியளித்துள்ளது. மேலும், சகல வசதிகளையும் கொண்ட தரமான சிறையில் அவர் அடைக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய சிறைகளின் நிலையை கருத்தில் கொண்டு, நீரவ் மோடியை நாடு கடத்த UK கோர்ட் தயக்கம் காட்டியது. இதேபோல், பெல்ஜியத்தில் உள்ள அவரது உறவினர் மெகுல் சோக்ஸிக்கும் இந்திய அரசு உறுதியளித்தது.

News October 4, 2025

மெக்னீசியம் குறைவா இருக்கா?

image

மிக முக்கியமான தாதுக்களில் ஒன்றான மெக்னீசியம், 300-க்கும் மேற்பட்ட உடல் செயல்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. மெக்னீசியம் குறைவாக இருந்தால், தசை வலி, சோர்வு, மன அழுத்தம், தூக்கம் குறைவு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். மேலே மெக்னீசியம் நிறைந்த உணவுகளை, போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதில் இல்லாத வேறு ஏதேனும் உணவு, உங்களுக்கு தெரிந்தா கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!