News October 6, 2025
சற்றுமுன்: தங்கம் விலை தாறுமாறாக மாறியது

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் ₹1,400 அதிகரித்து நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளது. காலையில் சவரனுக்கு ₹880 அதிகரித்த நிலையில், மாலையில் ₹520 உயர்ந்துள்ளது. தற்போது, ஒரு கிராம் ₹11,125-க்கும், ஒரு சவரன் ₹89,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்தாண்டில் மட்டும் 1 சவரன் 30,000-க்கு மேல் அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News October 6, 2025
‘நம்ம மெட்ரோ’ கிடையாது; இனி ‘பசவா மெட்ரொ’

பெங்களூரு மெட்ரோ பெயரை ‘பசவா மெட்ரோ’ என்று மாற்ற மத்திய அரசுக்கு கர்நாடக CM சித்தராமையா பரிந்துரை செய்துள்ளார். இது தற்போது ‘நம்ம மெட்ரோ’ என்று அழைக்கப்படுகிறது. கர்நாடகாவின் ஆன்மிக குருவாக போற்றப்படும் 12-வது நூற்றாண்டில் வாழ்ந்த பசவன்னாவின் நினைவாக இந்த மாற்றமாம். மேலும், மாநிலத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பசவன்னாவின் படத்தை மாட்டவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
News October 6, 2025
தாடி வளரலையா? இதான் காரணம்!

ஆண்களே, தாடி வளரலன்னு கவலையா? பொதுவாக 25 வயது வரை தாடி வளராதது இயல்புதான் என டாக்டர்கள் சொல்றாங்க. அதற்கு பின்னும் தாடி வளராமல் இருக்க, மரபணு, டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, மன அழுத்தம், தூக்கமின்மை என பல காரணங்கள் இருக்கின்றன. பத்து தல படத்தில் வரும் சிம்பு மாதிரி தாடி வளரணுமா? அதற்கு என்ன செய்யவேண்டும் என்பதை தெரிந்துகொள்ள <<17726236>>க்ளிக்<<>> பண்ணுங்க.SHARE.
News October 6, 2025
தொடர் விடுமுறை.. பள்ளி திறந்த உடனே HAPPY NEWS

காலாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், மீண்டும் தொடர் விடுமுறைக்கு தயாராக <<17930326>>ஸ்பெஷல் பஸ்<<>> அறிவிப்பு வந்துள்ளது. தீபாவளியையொட்டி ஏற்கெனவே 3 நாள்கள்(அக்.18, 19. 20) விடுமுறையாகும். தீபாவளிக்கு அடுத்த நாளான அக்.21 அன்றும் விடுமுறை அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. இதனால், தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் செல்ல இப்போதே ரெடியாகுங்க நண்பர்களே..!