News October 18, 2025
நடிகை சமந்தா எக்கர் காலமானார்

பிரபல ஹாலிவுட் நடிகை சமந்தா எக்கர் (86) காலமானார். இவர் 3 முறை ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. The Brood, Doctor Dolittle, The Exterminator, The Dead Are Alive, Star Trek: The Next Generation, The Phantom உள்ளிட்டவை இவர் நடித்த படங்களில் முக்கியமானவை. இவர் அதிகம் ஹாரர் படங்களில் நடித்துள்ளார். RIP
Similar News
News October 18, 2025
Sports Roundup: வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை

*சுல்தான் ஜோஹர் கோப்பை ஹாக்கி இறுதிப்போட்டியில், இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. *இஸ்தான்புல்லில் நடந்த சர்வதேச வாள்வீச்சு தொடரில் பவானி தேவி வெள்ளி வென்றார். உலக ஜூனியர் பேட்மிண்டன் இறுதிப்போட்டிக்கு இந்தியாவின் தான்வி சர்மா முன்னேற்றம். *ஆசிய மகளிர் 7’S ரக்பி சீரிஸில், இந்தியா 0-43 என்ற புள்ளிகள் கணக்கில் ஜப்பானிடம் படுதோல்வி.
News October 18, 2025
பிறந்த குழந்தையை எப்போது தூளியில் போடணும்?

பிறந்த குழந்தையை தூங்க வைக்க காலங்காலமாக நாம் பயன்படுத்துவது தூளிதான். ஆனால், இதில் சில விஷயங்களை கவனிக்க வேண்டும் என டாக்டர்கள் கூறுகின்றனர். குழந்தை பிறந்து 2 வாரங்களுக்கு பின்பே தூளியில் போடவேண்டுமாம். மேலும், குழந்தை பிறந்து 6 மாதங்களுக்கு பிறகு தூளி பயன்படுத்துவதை குறைப்பது நல்லதாம். குழந்தையை சீக்கிரம் தூங்க வைக்க தூளியை வேகமாக ஆட்டக்கூடாது என்றும் அறிவுறுத்துகின்றனர். SHARE.
News October 18, 2025
இவர்களுக்கு தீபாவளி விடுமுறை இல்லை

தீபாவளியன்று டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களுக்கு விடுமுறை இல்லை என்றும் கட்டாயம் பணியில் இருக்க வேண்டும் எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 24 மணி நேரமும் டாக்டர்கள் பணியில் இருப்பதை உறுதி செய்ய மருத்துவ அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், அசம்பாவிதம் ஏற்பட்டால் dphei@nic.in என்ற மின்னஞ்சலுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.