News September 13, 2024
JUST NOW: இபிஎஸ் போராட்டம் அறிவிப்பு

திமுக அரசைக் கண்டித்து, சென்னையில் வரும் 24ம் தேதி அதிமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இபிஎஸ் அறிவித்துள்ளார். தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்காெடுமைகளை திமுக அரசு கட்டுப்படுத்த தவறி விட்டதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தமிழகத்தில் 6 முதல் 60 வயது வரையிலான பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை எனவும் இபிஎஸ் சாடியுள்ளார்.
Similar News
News November 22, 2025
தேனி மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கை

தேனி மாவட்டம் தேனி தேர்தல் அதிகாரி மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ் ஐ ஆர் படிவம் எவ்வாறு நிரப்புவது என்பது சம்பந்தமாக ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில் இரண்டு விதமாக நிரப்புவது சம்பந்தமாக அறிக்கையானது வெளியிடப்பட்டது. அதில் ஒன்று 2002ல் ஓட்டுரிமை இருந்தால் எப்படி படிவம் நிரப்புவது, மற்றொன்று அப்பா, அம்மா ஆகியோருக்கு ஓட்டுரிமை இருந்தால் எவ்வாறு நிரப்புவது என்று ஒரு அறிக்கை வெளிவந்துள்ளது.
News November 22, 2025
செளமியா அன்புமணிக்கு புதிய பட்டம்

ராமதாஸ் <<17003761>>விமர்சித்து<<>> வந்தாலும், பாமகவின் செயல்பாடுகளில் செளமியா அன்புமணியின் பங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பாமக மகளிரணி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட அவருக்கு, ‘பெண்கள் பாதுகாப்பு திலகம்’ என்ற புதிய பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் மகளிரணி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மகளிரை சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
News November 22, 2025
விஜய்யுடன் கூட்டணி இல்லை.. அதிகாரப்பூர்வ முடிவு

தவெக – காங்., கூட்டணி உருவாகுமா என அண்மைக்காலமாக அரசியல் களத்தில் பேசப்பட்டு வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இண்டியா கூட்டணி வலுவாக இருப்பதாக செல்வப் பெருந்தகை கூறியிருந்தார். இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த <<18349738>>5 பேர் கொண்ட குழுவை<<>> காங்., அமைத்துள்ளது. இதன்மூலம், தவெக – காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பது தெளிவாகியுள்ளது.


