News August 22, 2025
சற்றுமுன்: பாஜகவில் இணைந்தார் திமுக Ex பிரபலம்

திமுக Ex பிரபலம் KS ராதாகிருஷ்ணன் பாஜகவில் இணைந்துள்ளார். நெல்லையில் நடைபெற்று வரும் பாஜக மாநாட்டில் அமித்ஷா முன்னிலையில் அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார். கட்சித் துண்டை போர்த்தி அவரை பாஜக நிர்வாகிகள் வரவேற்றனர். நெல்லையை சேர்ந்த KS ராதாகிருஷ்ணன், Ex முதல்வர்கள் காமராஜர், கருணாநிதி ஆகியோருடன் நல்ல நட்பில் இருந்தவர். 2022-ல் கார்கேவை விமர்சித்ததற்காக திமுகவிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.
Similar News
News March 20, 2026
இறப்பதை விட இருந்து போராட வேண்டும்: சீமான்

இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் சிவா உயிரிழந்தது மிகுந்த மனவேதனை தந்ததாக சீமான் தெரிவித்துள்ளார். இனப்பற்றும், மொழிப்பற்றும் கொண்ட தன்மானத் தீரர்கள் இறந்து போராடுவதை விடவும், இருந்து போராட வேண்டும் என்பதை இனிவரும் தலைமுறையினருக்கு சொல்ல விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இறந்தவரின் குடும்பத்துக்கு தனது இரங்கலையும் சீமான் கூறியுள்ளார்.
News March 20, 2026
வரலாற்றில் இன்று

➤1854 – அமெரிக்காவின் குடியரசுக் கட்சி விஸ்கான்சின் ரிப்போன் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
➤ 1948 – சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் நடைபெற்றது
➤1956 – பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை அடைந்தது.
➤1977 – தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியை தழுவினார்.
➤2020 – நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
News March 20, 2026
அதிமுக MP மீது விசாரணையை தொடங்கிய மகளிர் ஆணையம்

நடிகை நயன்தாரா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய C.V.சண்முகம் மீது மாநில மகளிர் ஆணையம் தாமாக முன் வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. ஊடங்களில் வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் C.V.சண்முகம் MP என்பதால் நாடாளுமன்ற செயலரிடம் புகார் அளிக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க DGP-க்கு பரிந்துரைக்கவும் மகளிர் ஆணையம் முடிவு செய்துள்ளது.


