News August 29, 2025

சற்றுமுன்: அனைத்து பள்ளிகளுக்கும்.. அறிவிப்பு

image

மாணவர்களிடம் எதிர்மறையாக பேசக்கூடாது என ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணவர்களையும், வகுப்பில் சேட்டை செய்யும் மாணவர்களையும் அனைவரது முன்னிலையிலும் திட்டக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மாணவர்களின் கற்றலில் முன்னேற்றம் இல்லாதது குறித்து காரணம் கூறுவதை தவிர்த்து, அவர்களை கற்றலில் முன்னேற்ற முனைப்பு காட்டுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Similar News

News August 29, 2025

தினமும் 3GB.. செல்போன் ரீசார்ஜ் ஆஃபர்

image

ஜியோ, ஏர்டெல், BSNL உள்ளிட்ட தொலைதொடர்பு நிறுவனங்கள் ₹299 ரீசார்ஜ் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இதில், ஜியோ 28 நாள்களுக்கு தினமும் 1.5GB டேட்டா வழங்குகிறது. அதேபோல், ஏர்டெல் 28 நாள்களுக்கு தினமும் 1GB அளித்து வருகிறது. ஆனால், இதே விலையில் BSNL-ல் 30 நாள்களுக்கு தினமும் 3GB டேட்டா சேவை கிடைக்கும். மேலும், BSNL ட்யூன்ஸ், செல்ஃப்கேர் ஆப் போன்ற கூடுதல் அம்சங்களின் பலனையும் பெறலாம். SHARE

News August 29, 2025

ரஜினிக்கு பாராட்டு விழா: விஷால்

image

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்ததை கொண்டாடும் வகையில் விரைவில் ரஜினிக்கு பாராட்டு விழா நடத்தப்படும் என நடிகர் சங்கத் தலைவர் விஷால் தெரிவித்துள்ளார். தற்போது நடிகர் சங்க கட்டுமான பணிகள் நடைபெறுவதால், பாராட்டு விழாவிற்கான தேதி விரைவில் பரிசீலிக்கப்படும் எனவும், சினிமாவை விட்டு அரசியலுக்கு செல்லும் விஜயின் முயற்சி வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

News August 29, 2025

BCCI-ன் புதிய இடைக்கால தலைவர் நியமனம்

image

BCCI இடைக்கால தலைவராக ராஜீவ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. BCCI தலைவர் ரோஜர் பின்னியின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து, வரும் செப்டம்பரில் BCCI பொதுக்கூட்டம் மற்றும் தலைவருக்கான தேர்தல் நடைபெறும் வரை சுக்லா தலைவராக செயல்படுவார் என கூறப்படுகிறது. கடந்த 2020 டிசம்பர் 18-ம் தேதி சுக்லா BCCI-யின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

error: Content is protected !!