News October 4, 2025
சற்றுமுன்: கனிமொழி வீட்டில் பரபரப்பு

சென்னையிலுள்ள திமுக MP கனிமொழி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிகாலை மின்னஞ்சல் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன், வெடிகுண்டு நிபுணர்கள், போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல், ஆடிட்டர் குருமூர்த்தி இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, <<17900677>>ஸ்டாலின்<<>>, த்ரிஷா இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்டது.
Similar News
News October 4, 2025
சற்றுமுன் அதிரடி கைது

சென்னை நீலாங்கரையில் உள்ள வீட்டில் வைத்து யூடியூபர் மாரிதாஸை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கரூர் துயர வழக்கில் விஜய் & TVK தரப்பில் யாருமே நீதிமன்றத்தில் தங்கள் பக்க வாதத்தை முன்வைக்க இயலாத நிலையை உருவாக்கி, தந்திரமாக திமுக ஒரு நீதிமன்ற நாடகத்தையே நடத்தி முடித்துள்ளது என்று X-ல் விமர்சித்திருந்தார். இந்நிலையில், உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக, சைபர் க்ரைம் போலீசார் அவரை கைது செய்தனர்.
News October 4, 2025
கரூரில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் விசாரணை

கரூர் நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்கள் வரிசையாக சென்றது சர்ச்சையானது. இந்நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களிடம் காவல்துறை விசாரணை நடத்தியுள்ளனர். கூட்ட நெரிசல் குறித்து ஆம்புலன்ஸ்க்கு அழைப்பு விடுத்தது யார்? எத்தனை மணிக்கு அழைப்புகள் வந்தன என்று போலீசார் அவர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
News October 4, 2025
கேப்டன் பதவியில் இருந்து ரோஹித்தை நீக்க திட்டம்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ODI தொடரில் ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியில் இருந்து நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்டில் கேப்டனாக உள்ள சுப்மன் கில் ODI-க்கு கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. டெஸ்ட் மற்றும் டி20-களில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித் ODI மட்டுமே விளையாடி வருகிறார். கில் தலைமையில் 2027 உலகக்கோப்பையை எதிர்கொள்ள BCCI திட்டமிட்டுள்ளது இதன் மூலம் தெரிகிறது.