News September 3, 2025
JUST NOW: தி.மலை பேருந்தில் டிக்கெட்கள் திருட்டு

சென்னை மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து தி.மலை நோக்கி வந்த அரசுப்பேருந்தில் நடத்துனரின் பை திருடப்பட்டுள்ளது. அதில் இருந்த ரூ.2.44 லட்சம் மதிப்புள்ள அரசுப்பேருந்து டிக்கெட்டுளும் காணாமல் போன நிலையில், இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பேருந்து நிலையத்தின் மேலாளர், நடத்துனர் ஆகியோர் மாதவரம் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
Similar News
News September 5, 2025
தி.மலை: கடைக்கு போறதுக்கு முன் இத பாருங்க

கடைகளில் கூடுதல் விலைக்கு (ம) காலாவதியான பொருட்களை விற்கும் போது மாவட்ட நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்யலாம். இதில் வக்கீல் இன்றி நாமே புகார் செய்து உரிய நஷ்டஈடு பெற முடியும். confo-tv-tn@nic.in, tiruvannamalai.dcdrf@gmail.com என்ற இ-மெயிலில் (அ) மாவட்ட நுகர்வோர் மன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் (04175 -232395) தொடர்பு கொண்டு புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க. <<17618149>>தொடர்ச்சி<<>>
News September 5, 2025
நுகர்வோர் மன்றத்தில் புகார் செய்வது எப்படி ?

கடைகள் மட்டுமல்லாது பணம் கொடுத்து பெறப்படும் அனைத்து சேவைகளும் இதில் அடங்கும். எடைகுறைவு, மோசமான சேவை, ஏமாற்றுதல், போலி நிறுவனங்கள் போன்ற சூழ்நிலைகளில் புகார் செய்யலாம். மாவட்ட நுகர்வோர் மன்றங்களில் புகார் செய்யும் போது ரசீது, வீடியோ, புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் ஷேர் பண்ணுங்க
News September 5, 2025
தி.மலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்களுக்கு விருது

ஆசிரியராக இருந்து குடியரசுத் தலைவராக உயர்ந்த ராதாகிருஷ்ணனைப் போற்றும் வகையில், தமிழக அரசு ஆண்டுதோறும் வழங்கி வரும் நல்லாசிரியர் விருதுகள் இன்று (செப்டம்பர் 5) வழங்கப்படுகின்றன. மொத்தம் 386 ஆசிரியர்கள் விருது பெறுகின்ற நிலையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் 13 ஆசிரியர்கள் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.