News September 1, 2025

JUST NOW: சென்னையில் வைரஸ் காய்ச்சல் பரவல்

image

காலநிலை மாற்றம் காரணமாக சென்னை மற்றும் மேற்குத்தொடர்ச்சி மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார துறை எச்சரித்துள்ளது. மேலும் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களில் காய்ச்சல் பரவல் உள்ளதாகவும், வயதானவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல சுகாதார துறை அறிவுறுத்தியுள்ளது.

Similar News

News September 1, 2025

சென்னைக்கு தண்ணி எங்க இருந்து வருது தெரியுமா?

image

சென்னையின் முக்கிய நீராதரமாக உள்ளது கொசஸ்தலை ஆறு. இதில் சாலா, துண்டு மீன், அலாத்தி, சீடை மீன், மது கெண்ட, கெளுத்தி, இரு கெளுத்தி போன்ற வகை மீன்கள் கிடைக்கின்றன. இதனால் இந்த ஆறு சுமார் 5 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ளது.3757 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த ஆறு அடையாறு மற்றும் கூவம் ஆறுகளை விட இரண்டு மடங்கு அதிக நீர் பிடிப்பை கொண்டுள்ளது. ஷேர் பண்ணுங்க.

News September 1, 2025

99,09,632 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம்

image

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கு போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் 99,09,632 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News September 1, 2025

சென்னை: B.Sc, B.CA, M.Sc படித்தவர்களுக்கு அரசு வேலை

image

சென்னை உயர்நீதிமன்றத்தில் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 41 உதவி புரோகிராமர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.Sc,BCA, MCA, M.Sc படித்த 18 வயது முதல் 37 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,900-1,31,500 வரை வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் வைவா நடத்தப்படும். விருப்பமுள்ளவர் <>இந்த லிங்கில் <<>>வரும் செ.9க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!