News March 31, 2025
JUST NOW: சென்னையில் இளைஞர் வெட்டி கொலை

சென்னை பெரவள்ளூரில் சந்துரு என்ற இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். தனது நண்பரோடு மது அருந்தி விட்டு வந்தவரை, ஆட்டோவில் வந்த இருவர் வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்துருவை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். மேலும், கொலையில் தொடர்பு இருப்பதாக வினோத் உள்ளிட்ட இருவரை தேடி வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 2, 2025
CISF கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் ஆட்சேர்ப்பு

மத்திய தொழில் பாதுகாப்பு படையில் (CISF) 1161 கான்ஸ்டபிள் டிரேட்ஸ்மேன் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல்காரர், காலணி தைப்பவர், முடி திருத்துபவர், சலவை செய்பவர், ஓவியர், எலக்ட்ரீஷியன், தோட்டக்காரர், வெல்டர், தச்சர் பதவிகள் அடங்கும். அதிகபட்சமாக 493 பதவிகள் சமையல்காரருக்கானவை. பெண் விண்ணப்பதாரர்களும் இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். நாளை (ஏப்ரல் 3) கடைசி தேதி. <
News April 2, 2025
சென்னையில் மழைக்கு வாய்ப்பு

வளிமண்டலத்தில் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளதால், தமிழகத்தில் வரும் 5ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (ஏப்ரல் 2) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக குடை எடுத்துச் செல்லுங்கள். ஷேர் செய்யுங்கள்
News April 2, 2025
பிரபல கொள்ளையர்கள் கைது

ஆட்டோவில் தனியாக பயணிகப்பவர்கள் மற்றும் சாலையில் தனியாக நின்று கொண்டிருக்கும் அல்லது நடந்து செல்பவர்களை குறிவைத்து கொள்ளையடித்த பிரபல கொள்ளையர்களை போலீசார் கைது செய்துள்ளனர். லாரி ஓட்டுநரிடம் கொள்ளையடித்த புகாரில், தண்டயார்பேட்டையைச் சேர்ந்த சஞ்சய் மற்றும் விக்னேஷ் இருவரை கைது செய்தனர். 100 சிசிடிவி காட்சிகள் மற்றும் செல்போன் சினல்களை ஆய்வு செய்து போலீசார் இருவரையும் கைது செய்துள்ளனர்.