News August 16, 2024
அதை மட்டும் செய்யவே மாட்டேன்: ஜான்வி

ஆஸ்கர் விருதே கிடைக்கும் என்று சொன்னால் கூட தலையை மொட்டை அடித்து நடிக்க மாட்டேன் என நடிகை ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தலை முடிக்காக தனது அம்மா ஸ்ரீதேவி அதிக அக்கறை எடுத்து கொள்வார் எனவும், 4 நாள்களுக்கு ஒருமுறை தலையில் ஆயில் மசாஜ் செய்வார் என்றும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், முதல் படத்தில் நடிப்பதற்காக சிறிதளவு முடி வெட்டியதற்கு அம்மா மிகவும் கோபப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 6, 2025
தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான கடைசி ODI போட்டி இன்று விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. Vizaz-ல், இரவுநேரம் அதிக பனிப்பொழிவு இருக்கும் என்பதால் டாஸ் வெல்லும் அணி கண்டிப்பாக பந்துவீச்சை தேர்வு செய்யும். இந்தியாவின் பேட்டிங் வலுவாக இருந்தாலும், பந்துவீச்சில் முன்னேற்றம் காண வேண்டிய அவசியம் உள்ளது. SA-வும் கடும் சவால் அளிப்பதால் போட்டி அனல் பறக்கும்.
News December 6, 2025
மகளிர் உரிமைகளை மீட்க.. செளமியா அன்புமணி பயணம்

அன்புமணியின் TN மக்கள் உரிமை மீட்பு பயணத்தை தொடர்ந்து, செளமியா அன்புமணி மகளிர் உரிமை மீட்பு பயணத்தை இன்று தொடங்குகிறார். காஞ்சிபுரத்தில் இருந்து பயணத்தை தொடங்கும் அவர், அதிகாரத்தில் பெண்களுக்கு சமவாய்ப்பு, வன்முறையில்லா வாழ்வுக்கான மகளிர் உரிமை உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்யவுள்ளார். மகளிர் வாக்குகளை கவர்வதற்கு அவர், இந்த பயணத்தை தொடங்குவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
News December 6, 2025
புன்னகை அரசி சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்

வயசானாலும் அழகும், ஸ்டைலும், புன்சிரிப்பும் என்னிடம் மாறாது என்பது போல சினேகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் உள்ளன. அதில், மிளிரும் ஆடை மற்றும் ஆபரணங்கள் அணிந்து தங்கம் போல சினேகா ஜொலி ஜொலிக்கிறார். இந்த போட்டோக்களை பார்த்த மெய்சிலிர்த்து போன ரசிகர்கள், ஹீரோயினாக நடிப்பதை ஏன் நிறுத்தினீர்கள் என்று SM-ல் கேட்கின்றனர். SWIPE செய்து நீங்களும் போட்டோக்களை பாருங்க


