News November 24, 2024
ஜஸ்ட் மிஸ் பாய் சாப்.. MH லக்கி வேட்பாளர்கள்!

MH மாநிலத் தேர்தலில் சொற்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தவர்களைப் பார்க்கலாம். மலேகான் சென்ட்ரல் தொகுதியில் AIMIMஇன் முப்தி, ISLMஇன் ஆசீஃப் ஷேக்கை 162 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளார். சகோலியில் INCஇன் நானாபாவு, BJPஇன் அவிநாஸை 208 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பேலாபூரில் BJPஇன் மண்டா விஜய் மாத்ரேவிடம் என்சிபி (SP) வேட்பாளர் சந்தீப் 377 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்ந்தார்.
Similar News
News November 15, 2025
முதலில் MP, இப்போது MLA ஆஃபரா?

கூட்டணி குறித்து பிரேமலதா குழப்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. காரணம், திமுக, அதிமுக என 2 கட்சிகளும் விஜய பிரபாகரனுக்கு MLA சீட் என்ற ஆஃபரை முன்வைப்பதாக பேசப்படுகிறது. முன்னதாக MP சீட் விஷயத்தில் ஏமாற்றம் அடைந்ததை நினைவில் வைத்திருக்கும் பிரேமலதா, எதுவாக இருந்தாலும் அதை எழுத்துப்பூர்வமாக தரும்படி கேட்டிருக்கிறாராம். அப்படி தரும் கட்சியுடன் தான் கூட்டணி என்றும் கூறியிருப்பதாக பேசப்படுகிறது.
News November 15, 2025
சோஷியல் மீடியாவை அளவோடு யூஸ் பண்ணுங்க: CM

சமூகத்தில் நிலவும் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக கல்வியில் பல்வேறு மேம்பாடுகளை செய்து வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர்கல்வி தடையில்லாமல் கிடைக்க திராவிட மாடல் அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார். மேலும், இணையதளம், சோஷியல் மீடியாக்களை அளவோடு பயன்படுத்த வேண்டும் என்றும் மாணவர்களுக்கு ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
News November 15, 2025
முதல் டெஸ்ட்: அடுத்தடுத்து விக்கெட்களை இழந்த இந்தியா!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பொறுமையாக விளையாடி வருகிறது. 2-ம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை, 138/4 ரன்களை எடுத்துள்ளது. ஜடேஜா 11 ரன்களுடன், ஜுரெல் 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் கேசவ் மகாராஜ், மார்க்கோ யான்சன், போஷ், சைமன் ஹார்மர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தியுள்ளனர். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 21 ரன்கள் பின்தங்கியுள்ளது.


