News August 12, 2024

JUST IN: ஆம்ஸ்ட்ராங் நண்பர் கைது

image

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிக்குப் பழியாக கொலை நடப்பதைத் தடுக்க ரவுடி முருகேசன் கைது செய்யப்பட்டுள்ளார். பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடைய இவர், ஆம்ஸ்ட்ராங் உடன் மிக நெருக்கமாக இருந்து வந்தார். ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பழிதீர்க்க சிலர் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை எச்சரித்தது. இதைத்தொடர்ந்து, அவருக்கு நெருக்கமாகவும், அதேசமயம் தலைமறைவாகவும் உள்ள ரவுடிகளை போலீசார் வலைவீசி வருகின்றனர்.

Similar News

News March 20, 2026

உலக தடகள வரலாற்றில் கால்பதிக்கும் இந்தியா

image

2028 உலக உள்ளரங்க தடகளப் போட்டிகளை நடத்தும் உரிமையை முதல்முறையாக இந்தியா பெற்றுள்ளது. இதற்காக இந்தியாவும் நியூசிலாந்தும் மோதிய நிலையில், பலகட்ட ஆய்வுக்கு பிறகு, ஒடிசாவின் புவனேஸ்வர் தேர்வானது. இதன்மூலம் ஜப்பான், கத்தார் & சீனாவை அடுத்து இப்போட்டியை நடத்தும் ஆசியாவின் 4-வது நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. உலக உள்ளரங்க தடகள போட்டிகளில் இந்தியா இதுவரை ஒரு பதக்கம் கூட வென்றதில்லை.

News March 20, 2026

என்னப்பா இது விசிலுக்கு வந்த சோதனை..

image

கோவையில் ECI சார்பில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மாணவிகள் நடனமாடியபோது, ஒரு மாணவி விசில் ஊதினார். உடனடியாக தேர்தல் அதிகாரி ஒருவர் விசிலை மேடையிலேயே பிடுங்கினார். இது தேர்தல் நடவடிக்கையே என அதிகாரிகள் கூறினர். ஆனால், தொடக்கம் முதலே மத்திய, மாநில அரசுகளால் விஜய்யின் அரசியல் பயணத்திற்கு இடையூறு ஏற்படுவதாக தவெகவினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

News March 20, 2026

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

image

நாகை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. ஏற்கெனவே, அரியலூர், திருவாரூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதலே சில இடங்களில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. உங்கள் ஊரில் மழையா?

error: Content is protected !!