News December 23, 2025
JUST IN: வேலூரில் 291 போலீசார் பணியிட மாற்றம்!

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களில் பணிபுரியும் உதவி ஆய்வாளர்கள் (எஸ்.எஸ்.ஐ) மற்றும் காவலர்கள் உட்பட மொத்தம் 291 பேரை பணியிட மாற்றம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். நிர்வாக செயல்திறன் மற்றும் காவல் பணிகளின் மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
Similar News
News December 31, 2025
வேலூரில் 250 நாட்டுக் கோழிகள் இலவசம்!

வேலூரில் மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News December 31, 2025
வேலூர் குடியிருப்பு பகுதியில் புகுந்த பாம்பால் பரபரப்பு!

வேலூர் மாவட்டம் வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே முத்து மண்டபம் டோபிகானா பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் 4 அடி நீளம் உள்ள கண்ணாடி விரியன் பாம்பு இருப்பதாக இன்று (டிசம்பர் 31) பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் பாம்பை பத்திரமாக பிடித்து சென்றனர். குடியிருப்பு பகுதியில் பாம்பு புகுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
News December 31, 2025
வேலூர்: INDIA POST-ல் 30,000 காலிப்பணியிடங்கள்!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் & தபால் சேவகர் பணிகளுக்கு 30,000 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு கண்டிப்பாக தமிழ் தெரிந்திருக்க வேண்டும், அதேபோல் சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். இந்த பணிக்கு தேர்வு கிடையாது; 10 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். விருப்பமுள்ளவர்கள் <


