News April 7, 2025

JUST IN: மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மழை எச்சரிக்கை

image

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஏப்.7) காலை வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவெடுத்தது. இதன் காரணமாக நாளை (ஏப்.8) மயிலாடுதுறை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இத்தகவலை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் SHARE பண்ணுங்க..

Similar News

News April 8, 2025

இளைஞரின் நற்செயலை பாராட்டிய எஸ்.பி

image

மயிலாடுதுறை மாவட்டம், வைத்தீஸ்வரன் கோயில் கடைவீதியில் சாலை ஓரத்தில் கிடந்த ரூ.10,000 பணத்தை அவ்வழியாக சென்ற ஹேமந்த் குமார் என்பவர் எடுத்து வைத்தீஸ்வரன் கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சூரியமூர்த்தியிடம் ஒப்படைத்தார். ஹேமந்த் குமாரின் நற்செயலை பொதுமக்கள் பாராட்டிய நிலையில் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் இன்று ஹேமந்த்குமாரை நேரில் அழைத்து பாராட்டினார்.

News April 7, 2025

தபால் நிலையங்களில் ஆதார் முகாம்

image

மயிலாடுதுறை அஞ்சல் கோட்டத்தில் ப்ராஜெக்ட் ஆரோ திட்டத்தின் கீழ் தரம் உயர்த்தப்பட்ட மயிலாடுதுறை ஆர் எஸ், நீடூர், பேரளம் ஆகிய தபால் நிலையங்களில் ஒரு மாத காலம் ஆதார் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு மயிலாடுதுறை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆசிப் இக்பால் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க…

News April 7, 2025

Way2News செய்தி எதிரொலி: திறக்கப்பட்ட கழிப்பறை

image

கடந்த மாதம் Way2News செய்தியில் சீர்காழி திருமுல்லைவாசல் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கழிப்பறைகள் பூட்டப்பட்டுள்ளதாக செய்தியானது வெளியிடப்பட்டது. இதனை அடுத்து தற்போது அந்த கழிப்பறை திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை அப்பகுதியினர் மகிழ்ச்சியோடு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!