News November 23, 2025

JUST IN நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்

image

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை (நவ 24) மேற்கண்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை எல்லோருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

Similar News

News November 24, 2025

நெல்லை: டிரைவர் தற்கொலை

image

திசையன்விளை அருகே இட்ட மொழி நன்னி குளம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த லோடு ஆட்டோ டிரைவர் கண்ணன் நேற்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் திசையன்விளை போலீஸ் எஸ்ஐ பிரதீப் மற்றும் போலீசார் விரைந்து சென்று கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பாலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எதற்காக தற்கொலை செய்தார் என்பது குறித்து விசாரணை நடக்கிறது.

News November 24, 2025

BREAKING நெல்லை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

image

கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (நவ.24) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தென்காசி மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து, மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி, பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவு . SHARE

News November 23, 2025

BREAKING: நெல்லை வந்தடைந்த பேரிடர் மீட்பு படையினர்

image

நெல்லை மாவட்டத்திற்கு அதிக கன மழை எச்சரிக்கை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் இன்று (நவ.23) விடுக்கப்பட்டுள்ள நிலையில் 25 பேர் கொண்ட தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் அதிநவீன உபகரணங்களுடன் தற்போது நெல்லை வந்தடைந்தனர். இன்று காலை முதல் நெல்லை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!