News February 9, 2026
JUST IN: நாமக்கல்லில் விஷப்பூச்சி கடித்து மாணவி பலி!

நாமக்கல் மாவட்டம் குமாரமங்கலம் அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா ஒத்திகையின் போது, மூன்றாம் வகுப்பு மாணவி ரக்ஷிதா விஷப்பூச்சி கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். நடனப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது பறந்து வந்த விஷ பூச்சி கடித்ததில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News February 13, 2026
அறிவித்தார் நாமக்கல் கலெக்டர்!

நாமக்கல் மாவட்டத்தின் 8 தாலுகா அலுவலகங்களில் நாளை (பிப்.14) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி திருத்தம், மொபைல் எண் பதிவு மற்றும் புதிய கார்டு விண்ணப்பம் போன்ற சேவைகளைப் பெறலாம். பொதுமக்கள் தங்கள் பகுதி வட்ட வழங்கல் அலுவலக முகாமில் கலந்துகொண்டு ரேஷன் தொடர்பான புகார்கள் மற்றும் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள கலெக்டர் அறிவுறுத்தியுள்ளார். SHAREIT
News February 13, 2026
நாமக்கல் மாவட்டம் இரவு ரோந்து போலீசார் விவரம்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (12.02.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.