News October 25, 2025

JUST IN தூத்துக்குடிக்கு முதல்வர் வருகை

image

தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இம்மாதம் 28ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வருகை தருகிறார். கோவில்பட்டிக்கு வருகை தரும் முதல்வர் அங்கு கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகம், அலுவலகம் முன்பு அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலை ஆகியவற்றை அவர் திறந்து வைக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் அமைச்சர் கீதா ஜீவன் செய்து வருகிறார்.

Similar News

News February 1, 2026

கோவில்பட்டி: தேரோட்டத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி ஒருவர் பலி

image

கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதில் தேருக்கு தடி தடுப்பு போட்டு வந்த கழுகுமலையை சேர்ந்த சப்பாணி முத்து (70) என்பவர் கிழக்கு பஜார் பகுதியில் தேர் வந்த போது தடி போட முயன்றுள்ளார். அப்போது தவறி விழுந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News February 1, 2026

தூத்துக்குடி: பேருந்தில் பயணம் செய்பவர்கள் கவனத்திற்கு

image

தமிழக அரசு பேருந்துகளில், தொலைதூர பயணம் மேற்கொள்ளும் போது, அல்லது நகர பேருந்துகளில் நீங்கள் பயணிக்கும் போது பேருந்திலேயே உங்கள் Luggage-ஐ மறந்து வைத்து விட்டு, இறங்கிவிட்டால் பதற வேண்டாம். 044-49076326 என்ற எண்னை தொடர்பு கொண்டு, டிக்கெட் எண் மற்றும் பயண விவரங்களை கூறினால் போதும். உங்கள் பொருட்கள் பத்திரமாக வந்து சேரும். இந்த பயனுள்ள தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News February 1, 2026

தூத்துக்குடி: ரீல்ஸ் போடுபவர்கள் கவனத்திற்கு.. எச்சரிக்கை!

image

தூத்துக்குடி மாவட்டத்தில் வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வாள், கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்து கொண்டு புகைப்படம், ரீல்ஸ் வீடியோ பதிவேற்றம் செய்ய கூடாது எனவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வீடியோ வெளியிட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!