News December 27, 2025
JUST IN: தி.மலை விவசாயிகளுக்கு முதல்வர் புதிய அறிவிப்பு

தி.மலையில் இன்று வேளாண் கண்காட்சியைத் திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், வேளாண் துறைக்கு இதுவரை ரூ.1.94 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அவர், பெரணமல்லூரில் 500 மெட்ரிக் டன் சேமிப்புக் கிடங்கு மற்றும் விவசாயிகளுக்கான ஓய்வறை அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், சேத்துப்பட்டு, போளூர் மற்றும் வந்தவாசி பகுதிகளில் புதிய உலர்கூடங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
Similar News
News December 28, 2025
தி.மலை: வெவ்வேறு விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பலி!

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் அருகே ராமகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த தேவேந்திரன் (45), வயலில் டிராக்டர் ஓட்டியபோது அது கவிழ்ந்ததில் சேற்றில் சிக்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். மோரணம் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் வடமணப்பாக்கத்தைச் சேர்ந்த ராம்குமார் (25), வேலைக்குச் சென்றபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார். இதுகுறித்து பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 28, 2025
தித்திக்கும் திட்டங்கள் என்ற புத்தகத்தை வெளியிட்ட முதல்வர்,

திருவண்ணாமலை மாவட்டம், மலப்பாம்பாடி கலைஞர் திடலில் நடைபெற்ற அரசு விழாவில், “திராவிட மாடல் ஆட்சியின் தித்திக்கும் திட்டங்கள்” என்ற புத்தகத்தை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வெளியிட்டார். உடன் அமைச்சர்கள் வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, துணை சபாநாயகர் பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எம்பிகள் அண்ணாதுரை, தரணிவேந்தன் எம்.எல்.ஏக்கள் மற்றும் துறையை சார்ந்த அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.