News December 23, 2025
JUST IN: திண்டுக்கல் ரிங் ரோட்டில் விபத்து!

திண்டுக்கல் கிழக்கு வட்டம், தோட்டனூத்து கிராமம் புளியம்பட்டி அருகே நேற்று புதிதாக அமைக்கப்பட்ட ரிங் ரோட்டில், இரண்டு- நான்கு சக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ஆரியமாலா (74), விஜயா (70) மற்றும் மீனா (52) படுகாயமடைந்தனர். அவர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
Similar News
News December 28, 2025
திண்டுக்கல்: வாடகை வீட்டில் இருப்பவரா நீங்கள்?

திண்டுக்கல் மக்களே வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234) புகார் செய்யலாம். (SHARE பண்ணுங்க)
News December 28, 2025
மைக்கேல்பாளையம் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மைக்கேல்பாளையத்தில் நடைபெற்ற வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை பெறுவதற்கு நடைபெற்ற சிறப்பு முகாமில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் செ. சரவணன், வாக்காளர் பட்டியலில் புதிதாக சேர்க்கக்கோரி பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவத்தை பெற்றுக்கொண்டார்.