News October 22, 2025

JUST IN: சேலம் பள்ளிகளுக்கு விடுமுறை!

image

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சேலம் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கன மழை பெய்து வருவதால் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று(அக்.22) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

சேலம் மாவட்டத்தில் அவசர எண்கள் வெளியீடு!

image

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூர், சேலம், ஏற்காடு, ஆத்தூர், காடையாம்பட்டி, மேட்டூர், வீரபாண்டி, வாழப்பாடி, தாரமங்கலம், பகுதிகளில் வட கிழக்கு பருவமழை பெய்து வருவதால் அவசரகால உதவி எண்கள் வட்டாட்சியர் அலுவலக பகுதிகளும், தொலைபேசி எண்களும், மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ளார். அவசர உதவிக்கு சேலம் பகுதியில் உள்ள பொதுமக்கள் 0427 2452202,1077 ஆகிய எங்களை தொடர்பு கொள்ளவும்.

News October 22, 2025

சேலம்: நாளை நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்!

image

சேலம் (அக்.23) வியாழக்கிழமை நாளை முகாம் நடைபெறும் இடங்கள்; 1)புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம் பிரம்ம கூடம்.
2)மேட்டூர் சி எஸ் ஐ அரங்கம் ராஜகணபதி நகர்.
3) கீரிப்பட்டி முக்கோணம் பஸ் நிறுத்தம் அருகில்.
4)வீரபாண்டி கிருபானந்த வாரியார் பொறியியல் கல்லூரி பெரிய சீரகாபாடி. 5)கெங்கவல்லி நாயக்கர் மஹால் உலிபுரம்
6)தாரமங்கலம் ஓங்காளியம்மன் கோவில் திருமண மண்டபம் செலவடை.

News October 22, 2025

சேலம்: கட்டடத் தொழிலாளி தற்கொலை!

image

சேலம்: கோரிமேடு அருகே சின்ன கொல்லப்பட்டியைச் சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளியான சதீஷ்குமார்(22). இவர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலைக்கு முயன்று இருக்கிறார். எனவே இவர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்போது கன்னங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!