News September 12, 2025

JUST IN: சென்னை மெட்ரோ பணி ஊழியர் உயிரிழப்பு

image

சிவகங்கையைச் சேர்ந்த ஜெபஜல்தின் என்பவர் சென்னையில் மெட்ரோ ரயில் பணியில் ஊழியராக பணியாற்றி வந்தார். சூளைமேடு அப்துல்லா தெருவில் உள்ள பி.ஜி.ஹாஸ்டலில் தங்கி வந்த அவர், நேற்று நள்ளிரவு மது போதையில் 3-வது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். தடுப்பு சுவர் இல்லாமை காரணமாக விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Similar News

News September 12, 2025

சென்னை: கேன் தண்ணீர் பயன்படுத்துவர்கள் கவனத்திற்கு

image

சென்னை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. ஷேர் பண்ணுங்க.

News September 12, 2025

பனையூரில் TVK பிரச்சார வாகனம் தயார்!

image

தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளார். அதற்கான அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை செப்.13-ம் தேதி திருச்சியில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ள நிலையில் பனையூரில் விஜயின் பிரச்சார வாகனம் தயார் நிலையில் உள்ளது. அந்த வாகனத்தில் எம்.ஜி.ஆர், அண்ணா படம் இடம் பெற்றுள்ளது.

News September 12, 2025

வடபழனி முருகன் கோயிலில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

image

சென்னை வடபழனி முருகன் கோவிலில் ஓதுவார், தமிழ் மற்றும் இசை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளது. தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதம் ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலின் பணியிடங்களுக்கு <>hrce.tn.gov.in<<>> அல்லது vadapalaniandavar.hrce.tn.gov.in என்ற இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க செப்.30-ம் தேதி கடைசி ஆகும். (SHARE பண்ணுங்க)

error: Content is protected !!