News December 19, 2025
JUST IN சென்னை: இயக்குநர் லிங்குசாமிக்கு சிறை!

இயக்குநர் லிங்குசாமியின் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் 2016 ஆம் ஆண்டு பெற்ற ரூ.35 லட்சம் கடனுக்காக வழங்கப்பட்ட செக் பவுன்ஸ் ஆனது. 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கில், இயக்குநர் லிங்குசாமி & நிறுவனத்தின் நிறுவன இயக்குநர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகிய இருவருக்கும் தலா 1 ஆண்டு சிறை தண்டனை விதித்து அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், கடன் தொகையை 2 மாதத்திற்குள் செலுத்த உத்தரவிட்டுள்ளது.
Similar News
News December 20, 2025
சென்னை உணவுத் திருவிழா நாளை தொடக்கம்

மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களை அனைவரும் அறிந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன், 21.12.25 முதல் 24.12.25 வரை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. முன்னணி உணவகங்களின் தரத்திற்கு இணையாக சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படும் உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவ்விழாவை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நாளை மாலை 4.00 மணிக்கு துவக்கி வைக்க உள்ளார்.
News December 20, 2025
சென்னை: 12th பாஸ் போதும்; ரூ.1 லட்சம் வரை சம்பளம்!

1.இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 394 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
2.கல்வி தகுதி: 12th, B.Sc, டிப்ளமோமுடித்திருந்தால் போதும்.
3. மாத சம்பளம் ரூ.25,000 முதல் 1,05,000 வரை வழங்கப்படும்.
4. விருப்பமுள்ளவர்கள் இங்கே <
5.விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜன.09. செம்ம வாய்ப்பு! உடனே ஷேர் பண்ணுங்க.
News December 20, 2025
சென்னை: கேன் வாட்டர் குடிப்போர் கவனத்திற்கு

சென்னை மாவட்டத்தில் கேன் தண்ணீர் தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்து வருகின்றன. கேன் தண்ணீர் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. குடிநீர் கேன்களில், பிளாஸ்டிக் தரம், கேன்களின் சுத்தம், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி, BIS மற்றும் FSSAI முத்திரைகள் ஆகியவற்றை சரிபார்க்க வேண்டும். ஒரு கேனை 30 முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கேன்களின் நிறம் மாறினால் பயன்படுத்த கூடாது. (SHARE பண்ணுங்க)


