News December 7, 2025
JUST IN: சென்னையில் பிரபல தயாரிப்பாளர் கைது

திருமங்கலம் போதைப்பொருள் வழக்கில் சினிமா இணை தயாரிப்பாளர் சர்புதீன் ஒருநாள் கஸ்டடியில் விசாரிக்கப்பட்ட நிலையில், அவர் வழங்கிய தகவலின் பேரில் நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் தினேஷ் ராஜ் கைது இன்று செய்யப்பட்டார். போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்த தினேஷ் ராஜ் தற்போது தனுஷின் மருமகன் பவிஷின் ’லவ் ஓ லவ்’ என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 11, 2025
சென்னை: திரைப்பட பாணியில் பிரபல ரவுடி கைது!

சென்னை சூளைமேட்டில் 2024ல் நடந்த வழிப்பறி வழக்கில் ரவுடி பினுவை கைது செய்ய நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இந்த தேடப்பட்டு வந்த குற்றவாளி பினு, சூளைமேட்டில் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்த 75 பேரை சுற்றி வளைத்து பினுவை, போலீசார் நேற்று (டிச.10) கைது செய்தனர்.
News December 11, 2025
சென்னையில் பழமையான சிற்பங்கள் கண்டெடுப்பு!

சென்னை மயிலாப்பூரில் பழமையான வீரக்கல், சதிக்கல் உள்ளிட்ட சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மயிலாப்பூர் பகுதியில், தொல்லியல் ஆய்வாளர் சங்கத்தினர் ஆய்வுகள் நடத்தினர். அதில், கபாலீஸ்வரர் கோவில் அருகில் உள்ள தர்மராஜா கோவிலில், 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான மூன்று பலகைக்கல் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த சிற்பங்கள், நாயக்கர் காலத்தில், வாழ்ந்தோரின் வாழ்வியலை விளக்குபவையாக உள்ளன.